பகீர்! மத்திய பிரதேச தேர்தலை அலறவிட்ட பணம், மதுபானம், போதைப் பொருள்... நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை தேர்தல் பறக்கும் படையிர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
MP Election: கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை தேர்தல் பறக்கும் படையிர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேச தேர்தல்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் தொடங்கியது. சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவும் மிசோரத்தில் ஒரே கட்டமாகவும் கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று சத்தீஸ்கரின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு 70 தொகுதிகளில் நடத்தப்பட்டது. சத்தீஸ்கருடன் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் சிவராஜ் சிங் சவுகான், மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபகன் சிங் குலாஸ்தே உட்பட பாஜக, காங்கிரஸ், ஆத் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த 2.533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 73.86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இந்த மாநிலத்தில் 230 தொகுதிகளிலும் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
ம.பி. தேர்தலை அலறவிட்ட பணம், நகை:
முன்னதாக, தேர்தலை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனை அடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம், நகை, மதுபானம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில், கடந்த அக்டேபர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், மெத்தம் ரூ.339.95 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அக்டோபர் 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடந்த சோதனையில், ரூ.40.18 கோடி ரொக்கம், ரூ.65.56 கோடி மதிப்புள்ள 34.68 லிட்டர் மதுபானம், ரூ.17.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.92.76 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பிற உலோகங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, 2018ஆம் தேர்தலின்போது, ரூ.72.93 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் ரூ.340 கோடி மதிப்பிலான பணம், நகை, மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.