மேலும் அறிய

Sabarimala Aravana Payasam: சபரிமலை பக்தர்களே! அரவணை பாயசத்தில் இனி ஏலக்காய்க்கு 'நோ' - திருவிதாங்கூர் தேவசம் போர்ட் அதிரடி

Sabarimala Aravana Payasam: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தயாரிக்கப்படும் அரவண பாயாசத்தில், இனி ஏலக்காய் சேர்க்கப்படாது என திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது.

Sabarimala Aravana Payasam: அரவணை பாயாசத்தில் ஏலக்காய் சேர்ப்பது, பக்தர்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்  என கேரள உயர்நிதிமன்றம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருவிதாங்கூர் தேவசம் போர்ட் அறிவிப்பு:

திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தில் இனி ஏலக்காய் சேர்க்கப்படாது. அந்த பாணியில் கடந்த ஓராண்டாக தயாரிக்கப்பட்ட அரவணை பாயாசம் குறித்து எந்த புகாரும் வரவில்லை. இதன் காரணமாக அரவணை பாயசத்தில் இனி ஏலக்காய் சேகரிக்கப்படாது. அத்துடன் சீரகத்திலும், கிருமிநாசினி உள்ளதாக சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் தேவைப்பட்டால்  சீரகமும் அரவணை பாயசத்தில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

அரவணை பாயாச பிரச்னை:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அரவண பாயாசம்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றிற்கு 200 பேட்ச் பாயாசம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், அரிசி, சர்க்கரை, பழம், நெய் ஆகியவை அதிகளவில் சேர்ப்பதோடு, ஏலக்காய் மற்றும் சீரகம் போன்ற பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. சபரிமலை பக்தர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாகும். இந்நிலையில், தான் பாயாசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றதாக இருப்பதோடு, அதில் பூச்சிக் கொல்லிகள் இருப்பதால் ஆபத்து ஏற்படும் என்றும் புகார்கள் எழுந்தன.

ஆய்வு முடிவுகள்:

புகார்களை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாயாசத்திற்கு பயன்படுத்தப்படும் ஏலக்காயை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. அதுதொடர்பான அறிக்கையின்படி, அந்த ஏலக்காய் மாதிரியில் 14 கொடிய பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏலக்காயில் சில பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகவும், அவை கடுமையான நோய்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவை என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கைகள் வந்தவுடன், பூச்சிக்கொல்லி கலந்த விதைகள் அடங்கிய பாயாசத்தை விநியோகிக்கக் கூடாது என்று தேவஸ்தான வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவு:

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம்,  ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை பாயாசத்தை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கூறியதோடு, அதற்கு காரணமாக அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவை சுட்டிக்காட்டி கடந்த ஜனவரி 12-ந் தேதி எச்சரித்தது. அத்துடன் அதனை பயன்படுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.  ஆனால் அவை உண்ணத்தக்கவை என்று மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அரவணை பாயாசத்தில் ஏலாக்காயை தவிர்த்து வந்த தேவசம் போர்ட், இனி ஏலக்காயை பயன்படுத்தவே போவதில்லை என அறிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget