Kalaignar Womens Assistance Scheme: தகுதியான பெண்களை கண்டறிய சென்னையில் முகாம்.. எப்போது தெரியுமா? மேயர் பிரியா கொடுத்த தகவல்!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் கண்டறிவதற்கான முகாம் சென்னை மாநகராட்சி சார்பில் ஜூலை 24-ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Kalaignar Womens Assistance Scheme: தகுதியான பெண்களை கண்டறிய சென்னையில் முகாம்.. எப்போது தெரியுமா? மேயர் பிரியா கொடுத்த தகவல்! Camp on 24th July in Chennai to find eligible women for 1000 Rs scheme Kalaignar Womens Assistance Scheme: தகுதியான பெண்களை கண்டறிய சென்னையில் முகாம்.. எப்போது தெரியுமா? மேயர் பிரியா கொடுத்த தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/cc9dc2bdde740864e3e7c21d851981971689255430258571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காண ஜூலை 24 -ஆம் தேதி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
2023-24 சென்னை மாநகராட்சி - கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 10 அறிவிப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்படி சென்னை பள்ளிகளுக்கு ரூபாய், சென்னை பள்ளிகளுக்கு தலா ரூ 25,000 வீதம் ரூ5 இலட்சம் மதிப்பீட்டில் இசைக்கருவிகள் வழங்குதல், காலை வழிபாட்டு கூட்டத்தில் திருக்குறளுடன் அதன் விளக்கமும் கூற வைத்தல், மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்துதல், 100% தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லுதல், சென்னை பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டிகள் வழங்குதல் உள்ளிட்ட 10 அறிவிப்புகளின் செயல்பாட்டை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
பின்னர் மேயர் பிரியா அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: “தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை பணிகளும் செயல்பட வேண்டும் என்று நாள்தோறும் பல திட்டங்களை செயல்படுத்திய வருகின்றோம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி செயல்பாட்டிற்காக 22 திட்டங்களை அறிவித்திருந்த நிலையில் அவற்றில் 12 திட்டங்கள் இன்று முதல் செயல்படுத்தப்படுகின்றன.
காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை பொறுத்தவரையில் சென்னையில் அம்மா உணவகங்களுடன் இணைந்து நடத்துவதற்கான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது இரண்டு மாதங்களில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் அனைத்து மாநகராட்சி பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்குவதில் நிறைய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது, சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 1415 ரேஷன் கடைகள் உள்ளது இந்த ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மகளிருக்கு எந்த மாதிரி தொகை செல்ல வேண்டியுள்ளது என கண்டறிய உள்ளோம்.
500 பயனாளர்களை கண்டறிய ஒரு தன்னார்வலர் என்று சென்னை மாநகராட்சி சார்பில் ஆட்களை நியமிக்க உள்ளோம் . அது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம் இதுவரைக்கும் 17 லட்சத்து 18 ஆயிரத்து 663 ரேஷன் கார்டுகள் சென்னையில் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளில் இருந்து எந்தெந்த மகளிருக்கு உரிமைத்தொகை செல்ல இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு பின்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
அதேபோல் சென்னை மாநகராட்சி சார்பில் 3523 முகாம்கள் நடத்த இருக்கிறோம் , இந்த முகாம் மூலமாகத்தான் யார் யாருக்கு இந்த தொகை இருக்கிறது என்பதை கண்டறிய உள்ளோம். இந்த முகாம் ஜூலை மாதம் 24ஆம் தேதிக்கு தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)