Ashwini Vaishnaw on BSNL: வெளியான ஹேப்பி நியூஸ்: பிஎஸ்என்எல்-க்கு மாற தயாரா? - கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய மத்திய அரசு...
பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், அதன் சேவைகளை விரிவுபடுத்தவும் 1.64 லட்சம் கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிஎஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 1.64 லட்சம் கோடி அளிக்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
BSNL, BBNL இணைப்பு
இதன்படி பி.பி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், அதன் சேவைகளை விரிவுபடுத்தவும் 1.64 லட்சம் கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் மத்தியில் நலிந்துள்ள பிஎஸ்என்எல்
டெலிகாம் துறையில் தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களே சமீப ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்நிறுவனங்களின் மத்தியில் நலிவடைந்து வரும் முக்கிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
முழுமையான 4ஜி சேவை எப்போது?
தனியார் டெலிகாம் நிறுவங்கள் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ஒருபுறம் கலந்துகொண்டுள்ள நிலையில், அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் குறித்து இந்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியா முழுவதும் செயல்படுத்தும் என்று முன்னதாகத் தெரிவித்திருந்தது.
முழுமையான 4ஜி சேவைகளையே பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் வழங்காத நிலையில், நேற்று (ஜூலை.26) 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன.
5ஜி ஏலம்
முதல் நாளான நேற்று (ஜூலை.26) 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்ற நிலையில், நான்கு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீண்ட நாள்களாக பிஎஸ் என் எல் நிறுவனத்துக்கு தொழில்நுட்பரீதியான அனுமதி, உதவிகள் கிடைக்கவில்லை என்றும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்