ABP - C-Voter Survey: மணிப்பூர் வன்முறை: பிரைன் சிங் முதலமைச்சர் பதவியை தொடரலாமா? கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஏபிபி நிறுவனத்திற்காக, சி-வோட்டர்ஸ் நடத்திய பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஏபிபி நிறுவனத்திற்காக, சி-வோட்டர்ஸ் நடத்திய பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு:
மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், abp செய்திகளுக்காக சி வோட்டர்ஸ் அமைப்பு அகில இந்திய அளவில் பிரத்யேக கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த கள ஆய்வில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது பதில்களை தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பான அந்த கருத்துகணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
- மணிப்பூர் வன்முறைக்கான உண்மையான காரணம் தெரியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பெரும்பான்மைக்கும் சற்றே குறைவான நபர்கள் தெரியாது என பதில் அளித்துள்ளனர். கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தெரியும் - 44%
தெரியாது - 41%
சரியாக தெரியவில்லை - 15%
- மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களை தூக்கிலிட வேண்டுமா என்ற கேள்விக்கு, ஆம், இந்த வெட்கக்கேடான சம்பவத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும் என பதிலளித்துள்ளனர். கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம் - 87%
இல்லை - 3%
தெரியவில்லை - 10%
- மணிப்பூர் கலவரம் தொடர்பான செய்திகளை எதன் மூலமாக அறிந்துகொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பெரும்பாலானோர் தொலைக்காட்சி மூலமாக என தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து, செய்தித்தாள், ரேடியோ மற்றும் சமூக வலைதளங்களை ஆகியவையும், மணிப்பூர் கலவரம் தொடர்பான தகவல்களை அறிவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி - 42%
செய்தித்தாள் - 11%
ரேடியோ - 5%
சமூக வலைதளங்கள் - 31%
மற்றவை - 11%
- மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் பிரைன் சிங் பதவி விலக வேண்டுமா என்ற கேள்விக்கு, ஆம் என பெரும்பாலானோர் பதிலளித்துள்ளனர். கருத்து கணிப்புகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம் - 59%
இல்லை - 23%
பதில் சொல்ல விரும்பவில்லை - 18%