Budget 2024: அப்படி போடு! அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட்! - அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!
Budget 2024: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள் என, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Budget 2024: நாட்டின் வளர்ச்சிக்கான நான்கு முக்கிய அம்சங்களுக்கு தான் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிப்பதாக, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்:
2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல்ச் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ”நமது இளம் நாடு உயர்ந்த லட்சியங்கள், நிகழ்காலத்தில் பெருமிதம், ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது அரசு தனது சிறப்பான பணியை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மக்களால் ஆசீர்வதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஒரு ஆழமான நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது. இந்திய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றனர். ஏழை எளிய மக்கள், மகளிர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தான் எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டமான ஆய்ஷ்மான் பாரத், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
FM Sitharaman announces, "The health cover under the Ayushman Bharat scheme will be extended to all ASHA and Anganwadi workers and helpers." pic.twitter.com/UDNmvoZxqz
— ANI (@ANI) February 1, 2024
7 ஐஐடிகள், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள்:
தொடர்ந்து, ” மோடி தலைமையிலான அரசில் ஸ்கில் இந்தியா மிஷன் திட்டத்தின் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 54 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 3000 புதிய ஐடிஐகள் நிறுவப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்கள் அதாவது 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆழமான தொழில்நுட்ப தொழில்நுட்பங்களை வலுப்படுத்தவும், தன்னம்பிக்கையை விரைவுபடுத்தவும் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும். கொரோனா காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தின் செயல்பாடு தொடர்ந்தது. 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட நெருங்கிவிட்டோம். அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும். உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான 11 லட்சத்து 11 அயிரம் கோடி ரூபார் ஒதுக்கப்படும். உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட இந்திய தீவுகளில் மேற்கொள்ளப்படும். எதிர்கால் பாரத திட்டத்தை செயல்படுத்த, மாநிலத்தில் பல வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்கள் தேவை. 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக இந்த ஆண்டு ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.