Breaking LIVE: வரும் வாரம் முதல் ஒவ்வொரு அமர்வும் 10 ஜாமீன் மனுக்கள் மீது விசாரிக்கும்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
வரும் வாரம் முதல் 10 ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை-உச்சநீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
வரும் வாரம் முதல், உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு அமர்வும், 10 ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மற்ற நீதிமன்றங்களில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்ட 3000 ஜாமீன் மனுக்கள் நிலுவையில் இருப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
டாடா நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை..!
வேலைவாய்ப்பில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தொழில் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நம்ம ஊரு சூப்பரு பேனர் சர்ச்சை - அமைச்சர் பதில்
நம்ம ஊரு சூப்பரு பேனர் செலவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி முன்வைத்த புகாருக்கு அமைச்சர் பெரியகருப்பன விளக்கம்
மொத்தம் 84 ஆயிரத்திற்கும் அதிகமான விளம்பர பேனர்கள் அச்சிடப்பட்டுள்ளன.பேனர் ஒன்றுக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. விளம்பர பேனர்களை அச்சிடும்பணி தனிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக கூறுவது தவறு - அமைச்சர்
ஜவுளி தொழில்நுட்பக் கருத்தரங்கில் முதலமைச்சர் பேச்சு
சென்னையில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில் பங்கேற்று முதல்வர் உரையாற்றி வருகிறார்.
மங்களூர் குண்டு வெடிப்பு - என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ விசாரணைக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது

