Breaking News LIVE: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல்
Breaking News LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

Background
ஜப்பான் நாட்டில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளார். ஜப்பான் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது ரஷ்யா- உக்ரைன் போர் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து
சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.
கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு காவல் நீட்டிப்பு
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை மேலும் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி





















