Breaking News LIVE: திருவண்ணாமலை : விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..
Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
சென்னையில் 24வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்ர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை : விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..
திருவண்ணாமலை : விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ. 246 கோடியில் புதிய திட்டப்பணிகள்!
சட்டமன்ற மேம்பாடு திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ. 246 கோடியில் புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.
ஸியோமி நிறுவனத்தின் ரூ.5, 551 கோடி சொத்துகள் முடுக்கம்!
சீன செல்போன் நிறுவனமான ஸியோமியின் ரூ.5, 551 ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கதுறை அறிவித்துள்ளது. ஸியோமி டெக்னாலஜி நிறுவத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கதுறை தகவல் தெரிவித்துள்ளது.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
ஆசிய சாம்பியன்ஷிப் - வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.