Breaking News LIVE: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு - மின் உற்பத்தி நிறுத்தம்
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Background
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் அதிகரித்து 109.34 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூபாய் 99.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு - மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4 ஆகிய இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். 1, 2, 5 ஆகிய யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
போர்டிங் பாஸ்க்கு பதில் முக அடையாளம் - மத்திய அரசு திட்டம்
விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ’டிஜி யாத்ரா’ முயற்சியின் ஒரு பகுதியாக விமானங்களில் பயணிக்க முக அங்கீகார அமைப்பு அறிமுகமாகிறது. முதற்கட்டமாக கொல்கத்தா, வாரணாசி, விஜயவாடா, புனே, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் மார்ச் 2023க்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.





















