மேலும் அறிய

Breaking Tamil LIVE: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை - ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம்!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking Tamil LIVE: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை - ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம்!

Background

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 இந்நிலையில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. 

வெப்பநிலை காரணமாக மக்கள் ஊட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் வரும் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் மக்களுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. வரும் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் என்னை விமர்சிக்கும் பிரதமர் கர்நாடகா மாநிலத்திற்உ என்ன செய்தார் என சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்களை உடனுக்குடன் காணலாம். 

17:26 PM (IST)  •  30 Apr 2024

Breaking Tamil LIVE: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை - ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம்!

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் அறிவித்தார். 

16:57 PM (IST)  •  30 Apr 2024

Breaking Tamil LIVE: 18 மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் உயர்வு

சென்னையில் 18 மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் பார்க்கிங் மட்டும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

அதாவது, நந்தனம், திருவொற்றியூர், தேரடி, வண்ணார் பேட்டை, புது வண்ணார்பேட்டை, மண்ணடி, காலடிப்பேட்டை, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், விமானநிலையம், அசோக்நகர், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட 18 மெட்ரோ நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களை தவிர்த்து மற்ற நிலைய பார்க்கிங் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

15:51 PM (IST)  •  30 Apr 2024

டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு! லிஸ்ட்டில் யாரெல்லாம்!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட லிஸ்ட்டில் ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். மேலும், சஞ்சு சாம்சன், துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பண்ட், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், ஜெய்ஷ்வால், குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா,  அக்‌ஷர் பட்டேல், அர்ஷிப்திங் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

12:45 PM (IST)  •  30 Apr 2024

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாடு-கேரள எல்லையில் சரக்கு வாகனங்கள் மீது மருந்துகள் தெளிப்பு

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, தமிழ்நாடு-கேரள எல்லையில் சரக்கு வாகனங்கள் மீது மருந்துகள் தெளிக்கப்படுகின்றன

12:40 PM (IST)  •  30 Apr 2024

பிரஜ்வால் ரேவண்ணா ஜே.டி.எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்திTVK Vijay : தவெகவில் இணைந்த முக்கிய திரை பிரபலம்! கொண்டாடும் தொண்டர்கள்! வெளியான வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Embed widget