Breaking Tamil LIVE:ஜூன் 9ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் முடிந்தவரை அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான வாக்குப்பதிவுக்கு மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பது அருகிலுள்ள விவி பேட் இயந்திரம் மூலம் பார்க்க முடியும். இதனிடையே இந்த விவி பேட் பதிவாகும் வாக்குகளை, மின்னணு இயந்திரத்துடன் சரி பார்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
- ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது. நடப்பு சீசனில் சென்னை அணி அதன் சொந்த மைதானத்தில் பெற்ற முதல் தோல்வியாகும். அதேசமயம் நடப்பு தொடரில் லக்னோ அணி 2வது முறையாக சென்னையை வீழ்த்தியது. இதனிடையே இன்றைய ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றது.
- தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முறை கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதியே தேர்வுகள் முடிவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மக்களவை தேர்தல் என அடுத்தடுத்து நிகழ்வுகள் வந்ததால் தேர்வுகள் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் பள்ளி திறப்பு ஜூன் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Breaking Tamil LIVE:
ஜூன் 9ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு
ஜூன் 9ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிபேட் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விவிபேட் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.
Breaking Tamil LIVE: மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாயிலில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக அதிகாரிகள் கோயில் திருவிழாவில் மைக்செட்டை ஆப் செய்து கோயில் விழாவிற்கு இடையூறு அளித்து கோயில் அர்ச்சகரை மிரட்டல் விடுத்ததை கண்டித்து ஸ்ரீ சம்பந்தர் உழவாரப்பணி மன்றம், பாஜக, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
Breaking Tamil LIVE: நைட்ரஜன் ஐஸ் உணவு பொருட்களை கொடுக்க வேண்டாம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
நைட்ரஜன் ஐஸ் உணவு பொருளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
நைட்ரஜன் ஐஸ் உணவு பொருள் அல்ல எனவும், அதை உட்கொண்டால் மிக ஆபத்தான நிலைக்கு எடுத்துண்செல்லும். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவு பொருட்களையும் வழங்க கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் எலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்யும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Breaking Tamil LIVE: டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தீ விவசாயிகள் போராட்டம்.