Breaking Tamil LIVE: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- 2திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தமாக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார்.
- நேற்று சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்றிரவு 10:30 மணி அளவில் சிந்தாமணி புதூரில் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் அவருடன் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இரவு 10 மணியுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை என்ற நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
- கருணாநிதி குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர் ஜாபர் சாதிக் உலகம் முழுவதும் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார். திமுக பொறுப்பில் இருப்பவர்கள் போதைப்பொருள் விற்கின்றனர். தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை என ஆயிரம் கொடுத்து மாமியார் மருமகளுக்கு சண்டை விட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பேச்சு
-
ஐபிஎல் 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை இந்த சீசனில் 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் கனவுகளை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்கிறது - பிரதமர் மோடி
எம்.ஜி.ஆரின் கனவுகளை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
Breaking Tamil LIVE: மக்களவைத் தேர்தல் பரப்புரை - நெல்லை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நெல்லையில் பரப்புரை மேற்கொள்ள அம்பாசமுத்திரம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கேரளாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்துள்ள பிரதமர், நெல்லை, தென்காசிம், விருதுநகர்,குமரி, தூத்துக்குடி விளவங்கோடு ஆகிய பகுதி வேட்பாளர்களுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
புதுச்சேரி முதலமைச்சர் தலையாட்டி பொம்மை போல உள்ளார் - கார்கே குற்றச்சாட்டு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியுள்ளார்.