Breaking News LIVE: தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் ஒட்டுவதில் கட்டுப்பாடு விதிப்பு- தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரிவாக காணலாம்.

Background
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் அதிகபட்சமாக 78.82 சதவீத வாக்குகள் பதிவாகியது. மேற்கு வங்கத்தில் 71.84 சதவீத வாக்குகளும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற கேரளத்தில் 65.45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. முக்கிய வேட்பாளர்களான ராகுல் காந்தி, சசி தரூர், கஜேந்திர ஷெகாவத், சுரேஷ் கோபி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், நட்சத்திர வேட்பாளர்களும் போட்டியிட்ட தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 69.51 சதவீத வாக்குகள் பதிவாகியது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 3ம் கட்டத்திற்கான அரசியல் பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் முழு வீச்சில் ஈடுபட உள்ளனர். அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் ஒட்டுவதில் கட்டுப்பாடு விதிப்பு- தமிழ்நாடு அரசு
தனியார் வாகனங்களில், அரசால் அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட் ஒட்டுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Sunita Kejriwal : 10 வருஷங்கள் விசாரணை நடந்தா, 10 வருஷங்கள் கெஜ்ரிவாலை ஜெயில்ல வைப்பாங்களா? - சுனிதா கெஜ்ரிவால்.
#WATCH | Delhi | During her roadshow in the Kondli area, the wife of CM Arvind Kejriwal, Sunita Kejriwal says, "For one month, they have forcefully put your CM and my husband in jail. No court has convicted him so far. They are saying that the investigation is going on. If the… pic.twitter.com/rIkF7YMgXa
— ANI (@ANI) April 27, 2024






















