மேலும் அறிய
Breaking News LIVE 9th Nov 2024: அமரன் படம் ஓடும் திரையரங்குகளில் 2வது நாளாக பாதுகாப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
- விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கள ஆய்வு – இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று செல்கிறார்
- வங்கக்கடலில் அடுத்த 32 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – கனமழை பெய்வதற்கு வாய்ப்பு
- 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – த.வெ.க. கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
- தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது தி.மு.க.விற்கு சாதகம் – நடிகர் சத்யராஜ் பேச்சு
- தாமரை மலராது என்று சொல்லிய இடங்களில் எல்லாம் இன்று பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது – அமைச்சர் சேகர்பாபுவிற்கு தமிழிசை பதில்
- சுகாதாரத்துறை குறைகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்காமல் விவாதத்திற்கு அழைப்பதா? முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கண்டனம்
- பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பால் கூட்டுறவு சங்கத்தில் பாலில் தண்ணீர் கலந்து மோசடி – பொதுமக்கள் அதிர்ச்சி
- மகாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம்; தலைமைத் தேர்தல் ஆணையர் கண்டனம் – தரக்குறைவாக பேசும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றால் முதலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையைத்தான் அகற்ற வேண்டும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
- தான் யாரையாவது காயப்படுத்தி இருந்தாலோ, பாதித்து இருந்தாலோ மன்னித்து விடுங்கள் – கடைசி பணி நாளில் தலைமை நீதிபதி சந்திரசூட் உருக்கம்
- அரசியல் சாசனத்தை திருத்தாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை – முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்
- வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்காவிற்கு பிரிவினைவாத அமைப்பு ஆதரவு – முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
- தீபாவளி விடுமுறையை ஈடு செய்ய தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும்
- ஆந்திராவில் கடல் விமான சேவை இன்று தொடக்கம்; விஜயவாடா நகரத்தில் இன்று தொடங்கப்படுகிறது
- இமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சருக்காக வாங்கிய சமோசா காணாமல் போனது தொடர்பாக சிஐடி விசாரணை
12:49 PM (IST) • 09 Nov 2024
அமரன் படம் ஓடும் திரையரங்குகளில் 2வது நாளாக பாதுகாப்பு
சிவகார்த்திகேயனின் அமரன் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் 2வது நாளாக தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
11:59 AM (IST) • 09 Nov 2024
விமானம் மூலம் மதுரை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! உற்சாக வரவேற்பு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விருதுநகருக்கு இன்று கள ஆய்வுக்காக செல்கிறார். இதற்காக விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















