மேலும் அறிய
Breaking News LIVE: விநாயகர் சதுர்த்தி: சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 5 பதக்கங்கள் – குவியும் வாழ்த்துகள்
- பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 பதக்கங்களை குவித்தது இந்தியா
- பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தல்
- சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு
- தன் மீது பாலியல் புகார் அளித்த பெண் யாரென்றே தெரியாது – நிவின் பாலி
- மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் கூறுவதை மதிப்போம் – கர்நாடக துணை முதல்வர்
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் – இலங்கை நீதிமன்றம்
- தருமபுரியில் சாப்பாட்டிற்கு பில் கேட்டதற்கு உணவக உரிமையாளரை ஷூவால் அடிக்க பாய்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்
- புருனே நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
- பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு மரண தண்டனை – மேற்கு வங்க மாநில சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
- ஹரியானாவில் பசுவை கடத்தியதாக தவறாக எண்ணி 12ம் வகுப்பு மாணவர் சுட்டுக்கொலை
- காந்தகார் விமானக் கடத்தலில் பயங்கரவாதிகளின் உண்மை பெயர் வெளியிடப்படும் – நெட்ஃப்ளிக்ஸ் விளக்கம்
19:26 PM (IST) • 04 Sep 2024
பாலியல் புகார்களை விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்தவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை
"பாலியல் புகார்களை விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்தவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை கமிட்டி செய்யும் பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டி மூலம் புகார்களை அளிக்கலாம். நேரடியாக ஊடகங்களில் பேச வேண்டாம் என அறிவுரை" - தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
16:18 PM (IST) • 04 Sep 2024
THE GOAT படத்திற்கு நாளை மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி!
THE GOAT படத்திற்கு நாளை மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி!
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















