மேலும் அறிய
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
Background
- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி விரைவில் விடுவிக்க வாய்ப்பு - திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார் - தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தல்
- செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - இன்று 17 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு
- சேலத்தில் 11ம் வகுப்பு மாணவி மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
- தவெக மாநாடு - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது
- திருமாவளவனின் மதுஒழிப்பு மாநாடு அரசியல் நாடகம் - விஜயபிரபாகரன் குற்றச்சாட்டு
- ஆர்ம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை - குற்றப்பத்திரிகையில் போலீசார் தகவல்
- மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் - பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை
- பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 5 மொழிக்களுக்கு செம்மொழி அந்தஸ்து - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு
- சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார் - உதயநிதியை மறைமுகமாக தாக்கிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்
- மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை - இந்தியா கண்டனம்
- ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்
- இஸ்ரேல் படைகள் மீது முதல்முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கிச்சூடு
- ஈரானில் விஷ சாராயம் அருந்தி 26 பேர் உயிரிழப்பு
- காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்
- பெண்கள் டி-20 உலகக் கோப்பை - இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
- பெண்கள் டி-20 உலகக் கோப்பை - இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா
13:56 PM (IST) • 04 Oct 2024
பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்!
ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்!
13:19 PM (IST) • 04 Oct 2024
உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்
நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்
லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்
Load More
Tags :
TN Weather Breaking News Live Update CM MK STALIN News Update Latest News Update Breaking News LIVEஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















