மேலும் அறிய
Breaking News LIVE 31st OCT 2024: சம்பவம் உறுதி ! தோனியை தக்க வைத்தது சி.எஸ்.கே!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகல தீபாவளி கொண்டாட்டம் – சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- காஷ்மீர், அசாம் எல்லையில் ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம் – மற்ற எல்லையிலும் இந்திய வீரர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகம்
- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்கவர் வான வேடிக்கை
- தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் சொந்த ஊர் பயணம்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று வழக்கத்தை விட அதிகளவு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் விற்பனை அமோகம்
- போக்குவரத்து ஊழியர்களின் சுமையை குறைக்க தனியார் பேருந்துகளை பயன்படுத்துவதாக அமைச்சர் சிவசங்கர் பேட்டி
- திருப்பூரில் பேருந்து நிலையத்தில் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு வரிசையில் காத்திருந்த பயணிகள்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 108 அவசர மேலாண்மை நிலையத்தில் துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு – அரசு ஆம்புலன்ஸ்கள் தயார்
- அரசு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் – துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்
- சென்னையில் நேற்றே பட்டாசு வெடித்து கொண்டாடத் தொடங்கியதால் காற்று மாசு அதிகரிப்பு – தமிழ்நாடு முழுவதும் இன்று காற்று மாசு அதிகரிக்க வாய்ப்பு
- மதுரையில் பெய்த கனமழையால் சாலைகளில், குடியிருப்புகளை மீண்டும் சூழ்ந்த மழைநீர் – தீபாவளி கொண்டாட முடியாமல் பொதுமக்கள் அவதி
- தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை
- கொல்கத்தா மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு மருத்துவர்கள் பேரணி
- லடாக் எல்லையில் இந்தியா – சீனா படைகள் விலகல்; தீபாவளி பண்டிகைக்காக இரு நாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகள் பரிமாற திட்டம்
- மகாராஷ்ட்ரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 575 சதவீதம் உயர்வு
- இந்தியா ஆபத்தான மிகவும் கடுமையான பொருளாதார நிலையில் உள்ளது – காங்கிரஸ் எச்சரிக்கை
- ஐ.பி.எல்.- தொடரில் எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறது என்ற ரிட்டென்சன் பட்டியல் இன்று வெளியாகிறது
- இந்தியா – நியூசிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
17:59 PM (IST) • 31 Oct 2024
Breaking News LIVE 31st OCT 2024: சம்பவம் உறுதி ! தோனியை தக்க வைத்தது சி.எஸ்.கே!
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார். அதேபோல் மும்பை அணியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, திலக், சூரியகுமார் யாதவ் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பெங்களூர் அணியில் விராட் கோலி உட்பட 3 பேர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் உள்ளிட்ட 5 பேர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
13:34 PM (IST) • 31 Oct 2024
“ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடக்கின்றன" -பிரதமர் மோடி பேச்சு!
“ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடக்கின்றன" -பிரதமர் மோடி பேச்சு!
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















