Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- பிரதமர் மோடியை வரும் செப்.27ம் தேதி நேரில் சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – நிதி ஒதுக்கீடு, புதிய கல்விக்கொள்கை முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டம்
- உடல்நலக்குறைவால் பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
- தமிழ்நாட்டில் இதுவரை நடப்பாண்டில் 14 ஆயிரம் பேருக்கு டெங்கு – பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது சுகாதாரத்துறை
- சென்னையில் பிரபல ரவுடி சீசிங் ராஜா போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை – போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது துப்பாக்கிச்சூடு
- இலங்கை அதிபர் தேர்தலாலும், ஆட்சி மாற்றத்தாலும் எந்த பயனும் இல்லை – தமிழக அகதிகள் கருத்து
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் – நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர களப்பணி
- போதைப் பொருட்களை விற்பனை செய்ய ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே தி.மு.க. விற்பனைக்கு எடுத்துள்ளது – முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் குற்றச்சாட்டு
- 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் – தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை
- அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தின் திறப்பு விழா – ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் பங்கேற்பு
- பிரதமர் மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று கூறுவதா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
- அரசு மருத்துவமனையில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பயிற்சி பெண் மருத்துவர்கள் அவதி
- இலங்கையின் அதிபராக வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசநாயகே இன்று பதவியேற்பு
- இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசநாயகேவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
- பிரதமர் மோடியை சரமாரிய விளாசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மோகன் பகவத்திற்கு 5 கேள்விகளை எழுப்பினார்
- திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது ஆந்திர அரசு
- மேற்கு வங்க வெள்ள பாதிப்பு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்
- ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போரை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை – ரயில்வே அமைச்சகம் முடிவு
- ராஜஸ்தானில் ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை
சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.!
சென்னை: மறைந்த சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் , திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
1,000 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ₹1 கோடி நிதி ஒதுக்கீடு!
1,000 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ₹1 கோடி நிதி ஒதுக்கீடு!: தமிழக அரசு
பாலகோடு அருகே யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள செங்கோடப்பட்டி அருகே உணவு தேடி ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை, விவசாய நிலத்தில் நுழைந்து, துரைசாமி (58) என்பவரை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே விவசாய துரைசாமி உயிரிழந்தார்.
காம்தார் நகரினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் SPB Charan கோரிக்கை!
மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கடைசி வரை வாழ்ந்த காம்தார் நகரினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் கோரிக்கை!
"நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படுமோசமான தவறை செய்துள்ளார்" -உச்சநீதிமன்றம்
"நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படுமோசமான தவறை செய்துள்ளார்" -உச்சநீதிமன்றம்
சிறார் ஆபாசப் படங்கள் என்ற வரையறையை சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள் என்று குறிப்பிடும் வகையில், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது. திருத்தத்தை ஒரு அவசரச் சட்டம் மூலம் கொண்டு வரலாம். எனவும், சிறார் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தை எந்த நீதித்துறை உத்தரவிலும் பயன்படுத்தப்படாது என்பதை நாங்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சிறார் ஆபாசப் படங்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக இதுதொடர்பான வழக்குகளைக் கையாளும் போது சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் என குறிப்பிடவும் உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.