Breaking News LIVE: ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால் அறிமுகம் செய்ய ஆராய்ச்சி தீவிரம் - அமைச்சர் மனோ தங்கராஜ்!
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Background
- தமிழ்நாட்டில் 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் இன்று புதிய முதலீடுகளுக்கான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்
- திருச்சி எஸ்.பி. வருண்குமார் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு; பரபரப்பு விளக்கம் அளித்த சீமான்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; மொட்டை கிருஷ்ணனை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா இயக்குனர் நெல்சன் மனைவி? போலீசார் விசாரணை
- குரங்கம்மை நோய் பரவல் குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை
- ஈரோட்டில் நடைபெற்ற கல்குவாரி விபத்தில் இரண்டு தொழிலாளிகள் உயிரிழப்பு
- ரயில் விபத்துக்களைத் தடுக்க ஏ.ஐ. கேமராக்கள் – ரயில்வே வாரிய தலைவர் தகவல்
- வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் டி20 உலகக்கோப்பை
Breaking News LIVE: பால் உற்பத்தி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில், மூலிகைகள் சேர்ந்த பால் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சார்பில், 2024-25-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பசுந்தீவனப் புல் கரணைகள் மற்றும் பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிபெற்ற களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், கறவைகளுக்கான ஊட்டச்சத்து டானிக் விற்பனைத் தொடக்கவிழா சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பால் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, 35 முதல் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். தற்போது போதுமான அளவிற்கு பால் கிடைக்கிறது. கடந்த ஆண்டு தான் 26 லட்சம் அளவிற்கு பால் உற்பத்தி குறைந்தது.
Breaking News LIVE:
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: முதலமைச்சர் அதிரடி உத்தரவு
கிருஷ்ணகிரி விவகாரம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் 15 நாட்களுக்குள் முடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் என்.சி.சி. திட்டத்திற்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கான முகாம் நடத்தப்பட்டது.
இதில் பயிற்றுநர்கள் சிலர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதை தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா என கண்டறிய விசாரணைக்கு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்து ஆணையிட்டுள்ளார். விசாரணையை துரிதமாக மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு புகார்.
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு புகார். நிலப் பிரச்னையை தீர்த்து வைப்பதாகக் கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரிடம் ₹36.20 லட்சம் மோசடி - மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
“தொழில் முதலீடுகள் செய்ய தமிழ்நாட்டைப் போல சிறந்த இடம் வேறு எங்கும் இல்லை”: SAINT-GOBAIN நிறுவனத்தின் CEO சந்தானம்
“தொழில் முதலீடுகள் செய்ய தமிழ்நாட்டைப் போல சிறந்த இடம் வேறு எங்கும் இல்லை” தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் SAINT-GOBAIN நிறுவனத்தின் CEO சந்தானம் புகழாரம்