Breaking News LIVE: கர்நாடக ஆளுநரை கண்டித்து வரும் 19ம் தேதி காங்கிரஸ் போராட்டம்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
LIVE
Background
- அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்று தொடக்கம்; காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கொல்கத்தா மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்; நாட்டின் பல மாநிலங்களில் மருத்துவர்கள் பேரணி
- கொல்கத்தா மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்; நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் ஸ்டிரைக்
- இந்திய மருத்துவ சங்கம் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சங்கம் ஆதரவு
- தமிழ்நாட்டில் செப்.14ம் தேதிதான் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு – டி.என்.பி.எஸ்.சி.
- ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்புகிறார்
- மீண்டும் மல்யுத்த களத்தில் களமிறங்குவது குறித்து வினேஷ் போகத் விளக்கம்
- காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல்; செப். 18ல் தொடக்கம்
- ஹரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி சட்டமன்ற தேர்தல்
- 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; விருதுகளை அறிவித்து பொன்னியின் செல்வன்
- சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகையாக நித்யா மேனனுக்கு தேசிய விருது
கர்நாடக ஆளுநரை கண்டித்து வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
கர்நாடக ஆளுநரை கண்டித்து வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு #KarnatakaGovernor #siddaramiah #Karnataka pic.twitter.com/PYvHy7aAqn
— ABP Nadu (@abpnadu) August 17, 2024
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுரி வளாகத்தில் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
மல்யுத்தமும் ஓயாது.. வினேஷ் போகத் சூளுரை
“என் போராட்ட குணமும், என் மல்யுத்தமும் என்றும் ஓயாது...” -இந்திய வீராங்கனை வினேஷ் போகத் சூளுரை
காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் ஏரி சாலைகளில் சோதனை
கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது போதை காளான் விற்பனை செய்து வந்தவர்கள், வாங்கியவர்கள் என 16 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு! கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் ஏரி சாலைகளில் சோதனை!
ஜிப்மர் மருத்துவமனை மாணவர்கள் போராட்டம்
கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள்!