மேலும் அறிய

பில்கிஸ் பானு வழக்கு...குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு...உச்ச நீதிமன்றம் அதிரடி..!

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு:

கடந்தக ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு, "பில்கிஸ் பானுவின் மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்படும். இன்று மாலையே இதுகுறித்து ஆராய்கிறேன்" என தெரிவித்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்ரகு எதிராக மனு தாக்கல் செய்தது மட்டும் இன்றி, கடந்த மே 13ஆம் தேதி, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரியும் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது பில்கிஸ் பானு தரப்பு.

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளும்படி மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.

குஜராத் கலவரம்:

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார். 21 வயதான பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை வேறு இருந்தது. 

பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3ஆம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல். 

கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா உள்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 7 பேரை கொடூரமாக கொலை செய்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில்  அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
Breaking News LIVE 5th OCT 2024: தமிழ்நாட்டில் அக்டோபர் 15ம் தேதியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Oct 5: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Embed widget