மேலும் அறிய

Bengaluru Traffic: பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் - ரு.13,262 கோடியில் 11 மேம்பாலங்கள், எங்கெங்கு?

Bengaluru Traffic: பெங்களூருவில் நிலவும் கடுமையான போக்குவரத்தை நெரிசலை குறைக்கும் வகையில், 11 இடங்களில் 13 ஆயிரத்து 262 கோடி செலவில் மேம்பாலங்களை அமைக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Bengaluru Traffic: போக்குவரத்து நெரிசலை குறைக்க பெங்களூருவில் புதியதாக எந்தெந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைய உள்ள என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு போக்குவரத்திற்கு தீர்வு..

பெங்களூரு என்றாலே தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிகராக கடுமையான போக்குவரத்து நெரிசலும் அனைவரது நினைவிற்கும் வருவதை தவிர்க்க முடியாது. நகர விரிவாக்கம் மற்றும் அதிகப்படியான புலம்பெயர்ந்தோர் காரணமாக, அங்கு போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளாது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கூட, பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை கண்டாலே அஞ்சி நடுங்குவர்.  பல கிலோ மீட்டர்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதெல்லாம் அந்த நகரில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என பல நாட்களாக நீடித்த வந்த கோரிக்கைக்கு, கர்நாடக அரசின் புதிய அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல் நல்ல பலனை அளிக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, நகரில் 11 இடங்களில் 13 ஆயிரத்து 262 கோடி செலவில் மேம்பாலங்களை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

பெங்களூருவில் 11 புதிய மேம்பாலங்கள்..

நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டில், பெங்களூருவில் சுமார் 75.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளன. நகரின் போக்குவரத்து பிரச்னைக்கு நீண்டகாலத்திற்கான தீர்வுகளை வழங்கும் மாநில அரசின் ஒரு முன்முயற்சி இது” என விளக்கமளித்துள்ளார். திட்டத்தில் உள்ள 11 வழித்தடங்களில் 9 வழித்தடங்கள் அரசு-தனியார் கூட்டு முயற்சி மூலம் கட்டப்படும் எனவும், மீதமுள்ள 2 வழித்தடங்கள் கட்டுமானம்- இயக்கம் - மாற்றுதல் மாடல் அடிப்படையில் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் புதிய மேம்பாலங்கள் - எங்கெங்கு தெரியுமா?

பெங்களூரு நகரில் புதியதாக அமைய உள்ள 11 மேம்பாலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி,

  • ஆர்.என்.எஸ் சாந்திநிகேதன் எதிரில் தும்கூர் சாலையில் உள்ள எம்.இ.ஐ சந்திப்பில் பிளவு மேம்பாலம்
  • மகாலட்சுமி லேஅவுட்டில் கார்டு சாலையின் மேற்கிலிருந்து வெளிவட்டச் சாலை வரையிலான பைப்லைன் சாலையில் உள்ள தரைப்பிரிப்பான்கள்
  • பழைய எலஹங்கா நகரம் வழியாக தொட்டபல்லாபுரா சாலையிலிருந்து (காவல் நிலைய சந்திப்பு) கோகிலு வட்டத்தில் உள்ள என்.எச்-7 (நவயுகா மேம்பாலம்) வரையிலான உயர்மட்ட வழித்தடம்
  • கனகபுரா சாலையை ஒட்டியுள்ள கோனன்குண்டே வட்டத்தில் உள்ள உயர்மட்ட வழித்தடம்
  • கனகபுரா சாலையில் உள்ள அடையார் ஆனந்த பவன் ரகுவனஹள்ளி குறுக்குப்பாதையில் உள்ள உயர்மட்ட வழித்தடம்
  • பி.ஜி.எஸ் மேம்பாலத்திலிருந்து டவுன் ஹால் வரை உள்ள வளைய மேம்பாலம் உட்பட மினர்வா வட்டத்திலிருந்து ஹட்சன் வட்டம் வரையிலான உயர்மட்ட வழித்தடங்கள்
  • சங்கொல்லி ராயண்ணா வட்டத்திலிருந்து (ஆனந்திராவ் மேம்பாலம்) நிருபதுங் சாலை (கே.ஆர். வட்டம்) வரையிலான உயர்மட்ட வழித்தடம்
  • சிர்சி வட்டத்திலிருந்து மைசூர் சாலையில் உள்ள நயந்தஹள்ளி வரையிலான உயர்மட்ட வழித்தடம்
  •  ஓசூர் சாலையை ஒட்டியுள்ள ஷோலே வட்டத்திலிருந்து செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை வரையிலான உயர்மட்ட வழித்தடங்கள் 

ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். இதுபோக மேலும் இரண்டு முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  •  ஐஓசி சந்திப்பில் ஒரு மேம்பாலம்
  • பையப்பனஹள்ளி ரயில்வே லெவல் கிராசிங்கில் கூடுதலாக இரண்டு வழி ரயில்வே மேம்பாலமும் கட்டுவதற்காக ரூ. 436.44 கோடி மதிப்பிலான திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும்  நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

புதிய மேம்பாலங்கள் பலன் அளிக்குமா?

மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்களில்  கனகபுரா சாலையில் ராகிகுட்டாவிலிருந்து தலகட்டபுரா வரையிலான (18.4 கி.மீ.) மற்றும் யஷ்வந்த்புராவிலிருந்து கே.ஆர்.புரம் வரையிலான (28 கி.மீ.) ஆகியவை நீண்ட வழித்தடங்கள் ஆகும். பெங்களூரு நகரில் தற்போதுள்ள போக்குவரத்து நடைமுறைகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கண்காணித்து, புதிய மேம்பாலத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஓரிடத்தில் இருந்து புறப்பட்டு, மற்றொரு இடத்திற்கு சென்றடையும் இடம் வரை எந்த நெருக்கடியையும் பொதுமக்கள் சந்திக்காத வகையில் மேம்பாலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம். இதன் பலன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget