Bengaluru Power Cut: இரண்டு நாட்களுக்கு பவர் கட்.. பெங்களூருவில் எங்கெல்லாம் மின் தடை.. முழு விவரம்
Bengaluru Power Cut: பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) நாளை நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி பல இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 7 மணி நேரம் மின் தடையை செய்யவுள்ளது

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி பெங்களூருவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது
பெங்களூரு மின் தடை:
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி பெங்களூருவின் கட்சந்திரா பிரிவில் பெஸ்காம் இணைப்பு பாதை பணிகளை மேற்கொள்வதால் நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழு மணி நேரம் வரை மின் தடை ஏற்படும்.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி மின்வெட்டு ஏற்ப்படும் என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
இந்த மின்வெட்டு 7 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் முடிவடைதை பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்:
கந்தமச்சனஹள்ளியைச் ஹுல்லெனஹள்ளி,கலிங்கய்யனபல்யா ஹோலகல்லு, சிங்கிபால்யா, படேசாபா-ராபால்யா, விருபசந்திரா, வீரநய-கனஹள்ளி
மின் தடை மற்றும் பராமரிப்பு அட்டவணைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொதுமக்கள் BESCOM இன் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்























