Bengaluru Power Shutdown: வீக் எண்ட்டிலும் பவர் கட்! பெங்களூரு மக்களே அலர்ட்.. நாளை(03-01-2026) 8 மணி நேரம் மின் தடை
Bengaluru Power Cut: பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (03-01-26 )நகரின் முக்கிய இடங்களில் 08 மணி நேரம் மின் தடை ஏற்படவுள்ளது.

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(03-01-2026) 08 மணி நேரத்திற்கு மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளும் இடங்களிள் மின் தடையானது காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் தடை இருக்கும் என்றும் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.
எந்த பகுதியில் மின் தடை?
ஹென்னூர் ராக், சாமுத்ரிகா என்கிளேவ், கிரேஸ் கார்டன், கிறிஸ்து ஜெயந்தி கல்லூரி, கே. நாராயண்பூர், பிலி ஷிவாலே, ஆஷா டவுன்ஷிப், ஐஸ்வர்யா லேஅவுட், மாருதி டவுன்ஷிப், நகர்கிரி டவுன்ஷிப், கே. நாராயண்பூர் கிராஸ், பி.டி.எஸ் கார்டன், கொட்டனூர், படேல் ராமையா லேஅவுட், பாஇரதி சி.எஸ்.ஐ. எவர்கிரீன் லேஅவுட், கனகஸ்ரீ லேஅவுட், கெடேலஹள்ளி, ஆசீர்வாதம் கார்டன், மந்திரி அபார்ட்மெண்ட், ஹிரேமத் லேஅவுட், டிரினிட்டி ஃபார்ச்சூன், மைக்கல் ஸ்கூல், பிஎச்கே இண்டஸ்ட்ரீஸ், ஜானகிராம் லேஅவுட், வத்தரப்பள்ளி, அனுக்ரா லேஅவுட், காவேரி லேஅவுட், ஆத்மா வித்யாநகர் (பைரட்டி, சி குரோஸ் வித்யாநகர்), லேஅவுட், சங்கம் என்கிளேவ், பைரடி ராக், ஸ்டார் லேஅவுட், திம்மேகவுடா லேஅவுட், ஆந்திரா காலனி, மஞ்சுநாதா நகர், ஹோரமாவு பிபிஎம்பி, அகர் கிராம், பாதாளம்மா கோயில், ஏகேஆர் பள்ளி, நியூ மில்லினியம் பள்ளி, லக்கம்மா லேஅவுட், பிரகாஷ் கார்டன், கிறிஸ்டியன் கல்லூரி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மின் தடை ஏற்படும்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்
கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.






















