Amit Shah: யாத்திரையை தொடங்கிவைக்கும் அமித்ஷா.. இந்த வழித்தடங்களை தவிருங்கள்.. போக்குவரத்து காவல் அறிவுரை!
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அமித்ஷாவின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அமித் ஷாவின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என பெங்களூர் நகரங்களிலுள்ள 28 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் களமிறங்கியுள்ளார்.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பாஜகவின் விஜய சங்கல்ப ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்க பெங்களூரு வருகிறார். பின்னர், மாலையில் பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் ஒன்றையும், மற்றொரு விஜய சங்கல்ப ரத யாத்திரையையும் கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதையடுத்து, இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா பெங்களூர் வருவதால் இந்த வழித்தடங்களை தவிர்க்குமாறு கர்நாடக காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பெல்லாரி சாலை, ஹெப்பாலா ஜே.என்., மேக்ரி வட்டம், கே. ஆர் வட்டம் போன்ற வழித்தடங்களை இன்று மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய உள்துறை அமைச்சர் பெங்களூரு நகருக்கு வருகை தருவதைக் கருத்தில் கொண்டு, 3 மார்ச் 2023 அன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து சீராக இருக்க மேற்கொண்ட வழித்தடங்களை தவிர்க்குமாறு வழியுறுத்தப்படுகிறது” என்று பதிவிட்டு இருந்தது.
— ಬೆಂಗಳೂರು ಸಂಚಾರ ಪೊಲೀಸ್ BengaluruTrafficPolice (@blrcitytraffic) March 2, 2023
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அமித் ஷாவின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பாஜக சார்பில் தொடங்கப்படும் நான்கு யாத்திரைகளும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொடங்கி 20 நாட்களுக்கு பிறகு ஒரே இடத்தில் கூட இருக்கிறது. இந்த மெகா பிரச்சாரத்தின் நிறைவு நாளில் பெரியளவில் பேரணியை நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 1ம் தேதி மார்ச் 1 ஆம் தேதி, ஜேபி நட்டா கர்நாடகாவின் சாமராஜநகரில் 'விஜய் சங்கல்ப் யாத்ரா'வை கொடியசைத்து துவக்கி வைத்தார், மார்ச் 2 அன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெலகாவியில் இருந்து தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் 'விஜய் சங்கல்ப் யாத்திரை'யை துவக்கி வைத்தார்.