மேலும் அறிய

Bihar Vaccination Record: மோடியின் பிறந்தநாளில் தடுப்பூசி: சுகாதாரப் பணியாளர்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா?

பாஜக ஆட்சியில் உள்ள கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விட செப்டம்பர் 17ம் தேதி பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டன

செப்டம்பர் 17ம் தேதி இந்தியா முழுக்க அதிக அளவில் கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த நாளில் இந்தியா முழுக்க இரண்டரை கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அந்த நாளில் கோவின் இணையதளத்தில் அதிகம் தடுப்பூசி போடப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவு பிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

பாஜக ஆட்சியில் உள்ள கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தை ஆகிய மாநிலங்களை விட செப்டம்பர் 17ம் தேதி பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டன.  இந்நிலையில் செப்டம்பர் 17ம் தேதி நள்ளிரவு வரை அங்கு 33,98,685 தடுப்பூசிகள் போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. 

அந்த மாநிலத்தில் மற்ற நாட்களில் சராசரியாக 2000 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன, ஆனால் செப்டம்பர் 17 அன்று, எண்ணிக்கை தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 14,483 ஆக உயர்த்தப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கும் அவற்றின்  தரவை ஆன்லைனில் பதிவேற்றுவதற்கும் மட்டும் அங்கு 50,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அதற்கு பின்னால் சுகாதார பணியாளர்களுக்கும், டேட்டா எண்ட்ரி ஆப்பரேடர்களுக்கும் மிகப்பெரிய அழுத்தம் அரசு சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதே போல செப்டம்பர் 17ம் தேதி அதிக தடுப்பூசிகள் போடப்பட்டதாக காண்பிப்பதற்கு அதற்கு முந்தைய நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் விபரங்களும் பதிவுசெய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.  

பீகாரைப் பொறுத்தவரை செப்டம்பர் 16 அன்று 1,333 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன, கோவினில் 86,253 பேர் தடுப்பூசிகள் போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. அதேபோல செப்டம்பர் 15ல் 1,45,593 தடுப்பூசிகள் போடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால்  செப்டம்பர் 17, பிரதமர் மோடியின் பிறந்தநாளில் சுமார் 34 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.


Bihar Vaccination Record: மோடியின் பிறந்தநாளில் தடுப்பூசி: சுகாதாரப் பணியாளர்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா?

குறிப்பாக தர்பாங்கா போன்ற மாநிலங்களில் செப்டம்பர் 16ம் தேதி 752 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில் 17ம் தேதி 11,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அது தொடர்பான விவரங்களும் கோவின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டன. அதேபோல லகிசரை மாவட்டத்தில் முந்தைய நாளில் 752 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில் செப்டம்பர் 17ம் தேதி  31,388 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் பெரிய அளவில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முகாம்களுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கொரோனா மூன்றாம் அலை வருமா எனும் அச்சம் மக்களிடம் இருக்கும் சூழலில் தடுப்பூசிதான் பேராயுதமாக உள்ளது. மோடியின் பிறந்தநாளில் செய்ய முடிந்ததை மற்ற நாட்களிலும் செய்யலாமே என பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget