UP: பாகிஸ்தானை பாராட்டி ராகம் வைத்து பாட்டு! தேடிப்பிடித்து கைது செய்த போலீஸார்!
பாகிஸ்தான் நாட்டை போற்றும் வகையில் இளைஞர்கள் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக பாட்டு வெளியிட்டதாக புகார் எழுந்துள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி முருவான் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் பாகிஸ்தான் நாட்டை போற்றும் வகையில் பாடல்களை ஒலிக்கவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதை அப்பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் என்ற நபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரிடன் இந்த இருவரும் சண்டை செய்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அவர்கள் செய்த சம்பவத்தை வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் ஆஷிஷ் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள் இருவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 153-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர். அதில் தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்த குற்றத்திற்காக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த மார்ச் 23ம் தேதி குத்மா தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பாகிஸ்தானின் குடியரசுதின போஸ்டரை பகிர்ந்து எல்லா நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் அல்லா ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த அருண்குமார் என்பவர் காவல்நிலையத்தில்புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் பாகிஸ்தானின் தீர்மான நாளை கொண்டாடும் விதமாக இருதரப்புக்கு இடையே வன்முறையை தூண்டுவதாக அவர் கூறியிருந்தார். இதனை அடுத்து இருதரப்புக்கு இடையே வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அந்தப் பெண் 1940ம் ஆண்டு லாகூர் தீர்மானத்தை நினைவூட்டும் வகையில் பதிவை செய்திருந்தார். அதன்படி 1940ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு தனி நிலம் கோரி, அகில இந்திய முஸ்லீம் லீக்கின் ஆண்டு அமர்வின் போது நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானின் உருவாக்கத்தில் இது ஒரு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பேசியதால் அப்பெண் கைது செய்யப்பட்டிருந்ததார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்