மேலும் அறிய

Bank Strike : செப்டம்பர் 26 முதல் 5 நாள் வங்கிகள் தொடர்ந்து இயங்காது.! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் - வெளியான அறிவிப்பு

Bank Strike September : வங்கிகள் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் அனைத்து சேவைகளிலும் வங்கிகள் முக்கிய தேவையாக உள்ள நிலையில், தொடர்ந்து 5 நாட்கள் தொடர்ந்து இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

மக்களின் அன்றாட தேவைகளில் வங்கிகளின் சேவைகள்

இன்றைய நவீன வாழ்க்கையில் உள்ளங்கைக்குள் உலகம் வந்து விட்டது. அந்த வகையில் மொபைல் போனில் இருந்தே அனைத்து வகையான சேவைகளையும் மேற்கொள்ள முடியும். ஏடிஎம், இணைய வங்கி, மொபைல் வங்கி, UPI போன்ற டிஜிட்டல் சேவைகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் பணம் செலுத்துதல் மற்றும் பணப் பரிமாற்றம் செய்தல் எளிதாகியுள்ளது. மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் இணையவழியாகச் செலுத்த முடிகிறது. அந்த வகையில் வங்கிச் சேவைகள் மக்களின் அன்றாட தேவைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பணத்தை பாதுகாப்பாக சேமிப்பது முதல் பணப் பரிமாற்றம் வரை பல்வேறு சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. 

வங்கிகள் 5 நாட்கள் தொடர் விடுமுறை

சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை போன்ற வசதிகள் மூலம் மக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாக நிர்வகிக்க முடிகிறது. மேலும், கல்வி, வீடு, தொழில், விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகள் கடனுதவி வழங்கி வருகின்றன. அரசின் நலத்திட்டப் பணப்பரிமாற்றங்களும் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாகச் சென்றடைகின்றன. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கி சேவைகள் பாதிப்பு.?

இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை உருவாகியுள்ளது.  வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாக அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை, கடன் தொடர்பான பணிகள் போன்ற சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சிறு வியாபாரிகள் மற்றும் தினசரி வருமானத்தை நம்பியுள்ள மக்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இணைய வழிச்சேவைகள் தொடரும்

அதே நேரம் ஏடிஎம் மற்றும் இணையவழிச் சேவைகள் தொடர்ந்து இயங்கினாலும், சில வங்கி சார்ந்த பணிகள் தாமதமாகலாம். இதனால் வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.இந்த நிலையில் வங்கி வேலைநிறுத்தம் குறித்து எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில், 

வாடிக்கையாளர் அறிவிப்பு

ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU), செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வேலைநிறுத்தக் காலத்தில் அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வழங்க எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் வேளையில், வாடிக்கையாளர்கள் பின்வருமாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

  • முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகளை வேலைநிறுத்தத் தேதிகளுக்கு முன்பே முடித்துக் கொள்ளவும்.
  • தங்கள் பணத் தேவைகளுக்கு ஏடிஎம்கள்/ADWM-களைப் பயன்படுத்தவும்.
  • வாடிக்கையாளர் சேவை மையங்களைப் (CSPs) பயன்படுத்தவும்.
  • இணைய வங்கிச் சேவை, YONO, மொபைல் வங்கிச் சேவை, UPI மற்றும் பிற டிஜிட்டல் வழிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும். வேலை நிறுத்தத்தால் ஏற்படும் சிரமங்களுக்கு நாங்கள் மனதார வருந்துகிறோம் என ஸ்டேட் பேங்க் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
உயிருக்காக போராடும் யானைக் குட்டி ‘மாயா’: சிறப்பு சிகிச்சைக்காக குஜராத்துக்கு ஹெலிகாப்டரில் இடமாற்றம்!
உயிருக்காக போராடும் யானைக் குட்டி ‘மாயா’: சிறப்பு சிகிச்சைக்காக குஜராத்துக்கு ஹெலிகாப்டரில் இடமாற்றம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
TVK vs DMK:
TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
"சுகாதாரத்துறையில் ஏஐ எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.." பத்மவிபூஷன் பெற்ற மருத்துவர் பேச்சு
Embed widget