மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன்: தங்க அங்கி ஊர்வலம்! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 23-ம் தேதி பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோயில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கிளம்பும்.

சபரிமலை கோயிலில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊர்வலம் வரும் 23-ம் தேதி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டு 26-ம் தேதி சன்னிதானத்தை வந்தடைகிறது. அன்று பிற்பகலில் 18-ம் படியேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன்: தங்க அங்கி ஊர்வலம்! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள் தொடர் வழிபாட்டுக்கு பிறகு வரும் டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று ஐயப்பனுக்கு 451 பவுன் எடை கொண்ட தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதற்காக 23-ம் தேதி பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோயில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கிளம்பும்.இதற்காக திருஆபரணப் பெட்டியில் அங்கி வைக்கப்பட்டு பல்வேறு ஊர்கள் வழியே கொண்டுவரப்பட உள்ளது. அன்று அதிகாலையில் தங்க அங்கி பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

பின்பு மேளதாளம் முழங்க, சிறப்பு வழிபாடுகளுடன் இந்த ஊர்வலம் தொடங்கும். தொடர்ந்து மூர்த்தி கணபதி கோயில், புன்னந்தோட்ட தேவி கோயில், சவுட்டுக்குளம் மகாதேவ கோயில், இலந்தூர் கணபதி கோயில் வழியாக ஓமல்லூர் ஶ்ரீ ரத்தகண்ட ஸ்வாமி கோயிலை வந்தடையும்.டிச. 24-ல் புறப்பட்டு வெட்டூர்‍ ஸ்ரீ மகாவிஷ்ணு கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் வழியே இரவு கோனி முரிங்கமங்கலம் சன்னிதானத்தை வந்தடைகிறது. டிச. 25-ல் ஊர்வலம் மீண்டும் மண்ணாரக்குளஞ்சி, வடசேரிக்கரை வழியாக பெருநாடு சாஸ்தா கோயிலை வந்தடையும். 26-ம் தேதி பிளாப்பள்ளி, நிலக்கல் வழியாக மதியம் 3 மணிக்கு பம்பையை வந்தடைய உள்ளது.

சபரிமலை ஐயப்பன்: தங்க அங்கி ஊர்வலம்! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கணபதி கோயிலில் வழிபாட்டுக்குப் பிறகு சரம்குத்தியில் இருந்து திருஆபரணப்பெட்டி யானை மீது ஏற்றிச் செல்லப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக் கொள்வார். பின்பு 18-ம்படி வழியே கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தங்க அங்கி கொண்டு செல்லப்படுவதால் 26-ம் தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மறுநாள் 27-ம் தேதி தங்க அங்கியுடன் கூடிய ஐயப்பனுக்கு மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு கோயில் நடை சாத்தப்படும். தங்க அங்கி ஊர்வலமாக புறப்பட உள்ளதை தொடர்ந்து இதன் வழித்தடங்களில் உயர் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் முன்னிலையில் இந்த ஊர்வலம் நடைபெறும். வழியில் உள்ள ஆலயங்களில் திருஆபரணப்பெட்டி ஊர்வலத்தை வரவேற்க சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget