மேலும் அறிய

Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு; யாருக்கெல்லாம் அழைப்பு? கலைநிகழ்ச்சிகள், நேரலையை எங்கு காணலாம்?

Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ராமர் கோயில் குடமுழுக்கு விழா:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல், ஆன்மீகம், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்கள் அடங்குவர்.

அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தலைவர்கள்:

  • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
  • துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்
  • பிரதமர் மோடி
  • உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
  • உத்தரபிரதேச ஆளுநர் அனந்திபென் படேல்
  • ஸ்ரீராம சென்ம பூமி தித்த் ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ்
  • ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
  • BAPS சுவாமி நாரயன்  சன்ஸ்தா
  • எல்.கே.அத்வானி
  • முரளி மனோகர் ஜோஷி
  • அகிலேஷ் யாதவ்
  • மல்லிகார்ஜுன் கார்கே 
  • சோனியா காந்தி 
  • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 
  • மன்மோகன் சிங்

தொழிலதிபர்கள்:

  • ரத்தன் டாடா
  • முகேஷ் அம்பானி
  • குமார் மங்கலம் பிர்லா
  • என் சந்திரசேகரன்
  • அனில் அகர்வால்
  • என்.ஆர்.நாராயண மூர்த்தி

சினிமா பிரபலங்கள்:

  • மோகன்லால்
  • ரஜினிகாந்த்
  • அமிதாப் பச்சன்
  • அனுபம் கெர்
  • மாதுரி தீட்சித்
  • சிரஞ்சீவி
  • சஞ்சய் லீலா பன்சாலி
  • அக்ஷய் குமார்
  • தனுஷ்
  • ரன்தீப் ஹூடா
  • ரன்பீர் கபூர்
  • அனுஷ்கா சர்மா
  • கங்கனா ரனாவத்
  • ரிஷப் ஷெட்டி
  • மதுர் பண்டார்கர்
  • அஜய் தேவ்கன்
  • ஜாக்கி ஷெராஃப்
  • டைகர் ஷெராஃப்
  • யாஷ் பிரபாஸ்
  • ஆயுஷ்மான் குரானா
  • ஆலியா பட்
  • சன்னி தியோல்

விளையாட்டு வீரர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர்
  • விராட் கோலி
  • எம்.எஸ். தோனி
  • தீபிகா குமாரி

கலை நிகழ்ச்சிகள்:

ராமர் கோயிலில் குடமுழுக்கினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமா மாலினி மட்டுமின்றி ராகேஷ் பேடி, வின்டு தாரா சிங் மற்றும் விஷால் நாயக் போன்ற பிரபல கலைஞர்களும், இந்துத்துவம் சார்ந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். அதோடு, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பகாவாஜ் இசைக்கலைஞர்கள் தொடங்கி, தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க வித்வான்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை:

கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்யும் நிகழ்வானது, ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 12.20 மணியளவில் நடைபெற உள்ளது.  இந்த மொத்த நிகழ்வுகளும் DD News மற்றும் தூர்தர்ஷனின் DD National சேனல்களில் 4K தரத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நேரலையை மற்ற செய்தி நிறுவனங்களும் ஒளிபரப்புவதற்கு ஏதுவாக,  ஒளிபரப்பாளர்களுக்கு தூர்தர்ஷனின் YouTube லிங்க் பகிரப்பட உள்ளது. ஜனவரி 23, 2024 அன்று, தூர்தர்ஷனின் ஆரத்தி மற்றும் ஸ்ரீராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Embed widget