UP Accident: சோகம்! குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் - 7 குழந்தைகள் உள்பட 15 பேர் மரணம்..
உத்திர பிரதேசத்தில் டிராக்டர் ஒன்று குளத்தில் கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திர பிரதேசத்தில் கஸ்கஞ்ச் பகுதியில், டிராக்டர் ஒன்று குளத்தில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 குழந்தைகள், 8 பெண்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாகி பூர்ணிமாவையொட்டி கங்கையில் குளிக்க சென்றப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
VIDEO | At least 15 people were killed after a tractor-trolley overturned in Kasganj, Uttar Pradesh. More details are awaited. pic.twitter.com/quW8Gp9qCa
— Press Trust of India (@PTI_News) February 24, 2024
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
जनपद कासगंज में सड़क दुर्घटना में हुई जनहानि अत्यंत हृदय विदारक है। मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) February 24, 2024
जिला प्रशासन के अधिकारियों को सभी घायलों के समुचित निःशुल्क उपचार हेतु निर्देश दिए हैं।
प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत आत्माओं को शांति तथा घायलों को शीघ्र…
இச்சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலரும் உயிர் இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவருக்கும் முறையான இலவச சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பகவான் ஸ்ரீராமரை வேண்டிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 -ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.