சோறு முக்கியம் பாஸ்..திருடச்சென்ற வீட்டில் மும்முரமாக கிச்சடி சமைத்து மாட்டியவர் கைது
திருட சென்ற வீட்டில், குறைந்தபட்ச எதிர்மறை விளைவுகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் மிக மும்முராக சமையலில் ஈடுபட்டிருக்கிறார்.
அசாம் மாநிலத்தில், டிஸ்பூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவம் கேட்போரை மலைக்க வைத்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய நகரமாகக் கருதப்படும் கவுகாத்தி நகரில் அமைந்துள்ள Hengerabari எனும் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையடிக்க சென்ற திருடனை கவுகாத்தி காவல்துறையியனர் கைது செய்துள்ளனர். வீட்டில், உள்ள விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற திருடன், சமயலறையில் சௌகரியமாக உணவு தயாரிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்ச எதிர்மறை விளைவுகளைப் பற்றி சிறிதும் யோசிக்கமாமல் மிக மும்முராக சமையலில் ஈடுபட்டிருக்கிறார். சமையல் வாசனையை உணர்ந்த சுற்றத்தார், உடனடியாக இந்த திருட்டு குறித்து காவல்துறையிடம், புகார் செய்துள்ளனர்.
The curious case of a cereal burglar!
— Assam Police (@assampolice) January 11, 2022
Despite its many health benefits, turns out, cooking Khichdi during a burglary attempt can be injurious to your well being.
The burglar has been arrested and @GuwahatiPol is serving him some hot meals. pic.twitter.com/ehLKIgqcZr
இந்த விசித்திரமான சம்பவம் குறித்து அசாம் காவல்துறை தனது ட்விட்டர் குறிப்பில், சிறுதானியக் கொள்ளையரின் சுவாரசியமான வழக்கு!
ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், திருட்டு முயற்சியின் போது கிச்சடி சமைப்பது உங்கள் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமையும். கொள்ளையர் கைது செய்யப்பட்டுள்ளார். கவுகாத்தி காவல்துறையினர் சில சூடான உணவுகளை அவருக்கு வழங்கி வருகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளது.
@CMOfficeAssam @himantabiswa@DGPAssamPolice @assampolice @hardispeaks @gpsinghips @NewsLiveGhy @DY365 @airnews_ghy @PIB_Guwahati @NELiveTV @NENowNews @pratidintime @prag_newsAssam @guwahatiplus @Sentinel_Assam
— Assam Police (@assampolice) January 11, 2022
மேலும், இந்த சம்பவத்தை அதீத உற்சாகத்தோடும், பூரிப்போடும் , அசாம் மாநில முதல்வர் மற்றும் செய்தி நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு டேக் செய்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிடிபட்ட குற்றவாளியிடம் கவுகாத்தி காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவிலியே, சம்பவத்தின் முழு உண்மைத்தன்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கன்சர்ன் வோல்ட் வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்பி (Concern Worldwide and Welt Hunger Hilfe) என்ற நிறுவனங்கள் கடந்தண்டு 2021 உலகளாவிய பட்டினி அறிக்கையை வெளியிட்டது. இந்த தரவரிசையில்,27.5 மதிப்பீடுடன் (GHI scores) இந்தியா 101 வது இடத்துக்கு பின்தங்கியது. கடந்த 2000ம் ஆண்டில் இந்தியாவின் மதிப்பீடு 38.9 ஆக இருந்தது. அது 2020ல், சில முன்னேற்றங்கள் கண்டு 27.2 ஆக குறைந்தது. தற்போது, அண்டை நாடுகளான பாகிஸ்தான் (92), இலங்கை(65), நேபாளம்(76) ஆகிய நாடுகளை விட இந்தியாவின் பட்டினி மதிப்பீடு அதிகரித்து காணப்படுகிறது.