மேலும் அறிய

Assam MP: "இந்துக்களும் இளம் வயதிலே திருமணம் பண்ணிக்கனும்.." அஸ்ஸாம் எம்.பி. சரமாரி சர்ச்சை பேச்சு...!

இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்ற கொள்ள வேண்டும் என இந்து மத குரு யட்டி நரசிம்மானந்த் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். 

இஸ்லாமியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் வலதுசாரி சிந்தனை கொண்ட சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என இந்து மத குரு யட்டி நரசிம்மானந்த் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். 

அஸ்ஸாம் எம்.பி.

இந்நிலையில், அஸ்ஸாமின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

"இந்துக்கள் முஸ்லீம் ஃபார்முலாவை ஏற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும்" என அவர் கூறி இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. "இஸ்லாமிய ஆண்கள் 20 முதல் 22 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். முஸ்லிம் பெண்களும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 18 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். 

மறுபுறம், இந்துக்களோ திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு, மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்து கொள்கிறார்கள். அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பணத்தைச் சேமிக்கிறார்கள்.

 

40 வயதிற்குப் பிறகு பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படியானால், 40 வயதிற்குப் பிறகு குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும்.

இள வயதிலே திருமணம்:

அவர்களும் (இந்துக்கள்) முஸ்லிம்களின் ஃபார்முலாவைப் பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். அவர்களுக்கு 20-22 வயதில் திருமணம் செய்து வைத்து, 18-20 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து, பிறகு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள்" என பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

ஷ்ரத்தா கொலை வழக்கை 'லவ் ஜிஹாத்'துடன் தொடர்புப்படுத்தி பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதில் அளித்த அவர், "இன்று நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் நம் முதலமைச்சர். எனவே, நீங்களும் நான்கைந்து 'லவ் ஜிஹாத்' நடத்தி எங்கள் முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லுங்கள்.

யாரால் அவரை தடுக்க முடியும்? நாங்கள் அதை வரவேற்போம். சண்டையிட மாட்டோம். உங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதும் தெரியவரும்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget