Andhra Pradesh: போதை! பலி கொடுக்கும் நேர்த்திக்கடனில் ஆட்டுக்கு பதிலாக ஆடு பிடித்திருந்தவர் தலை துண்டிப்பு!
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே மதுபோதையில் ஒருவர் ஆடு என்று நினைத்து மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Andhra Pradesh: போதை! பலி கொடுக்கும் நேர்த்திக்கடனில் ஆட்டுக்கு பதிலாக ஆடு பிடித்திருந்தவர் தலை துண்டிப்பு! Andhra Pradesh News Man mistakenly beheaded in cattle festival held in Chittoor district Andhra Pradesh: போதை! பலி கொடுக்கும் நேர்த்திக்கடனில் ஆட்டுக்கு பதிலாக ஆடு பிடித்திருந்தவர் தலை துண்டிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/17/f009bf9fc48bbf7cc13aa05329d0f087_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே மதுபோதையில் ஒருவர் ஆடு என்று நினைத்து மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக கால்நடைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும் கிராமத்திற்கு அருகில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு இரவில் சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அப்பொழுது, எல்லம்மா கோவிலில் பொதுமக்கள் தாங்கள் வேண்டுதலின் அடிப்படையில் ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். விடிய விடிய இந்த பூஜை நடைபெற்று வந்துள்ளது.
Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சலபதி என்ற நபர் யாகத்தின் ஒரு பகுதியாக ஆட்டின் தலையை தான் வெட்டுவதாக முன்வந்தார். சலபதி அந்த நேரத்தில் முழு குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 35 வயதான சுரேஷ் என்பவர் பொதுமக்கள் கொண்டு வரும் ஆட்டின் தலையை சலபதி வெட்டுவதற்கு ஏற்றவாறு பிடித்துள்ளார்.
இரவு 12 மணியளவில் பலிகொடுக்கும் இடத்தில் இருந்த சலபதி முழு போதையில் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார். இதனால் படுகாயமடைந்த சுரேஷ் உயிருக்கு போராட, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சோதனை செய்ய மருத்துவர்கள் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விவரங்களை சேகரித்து சலபதி கொலை வழக்குப் பதிவு செய்தனர். சுரேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)