CHITOOR TRAGEDY : கருணைக் கொலை கேட்டு வந்த தாய்; மடியிலேயே மரணித்த மகன்!
மேல்சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி தனியொரு பெண்ணாக இருந்து தனது மகனை பேணிக்காத்து கடைசியில் கருணைக் கொலை செய்யும் சூழ்நிலையிக்கு தள்ளப்பட்டு அதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்க சென்றபோது தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது .
கணவன் கைவிட்ட நிலையில் நாட்பட்ட நோயினால் பதித்து உயிருக்கு போராடி வந்த தனது 9 வயது மகனை , கருணை கொலை செய்யுமாறு விண்ணப்பம் அளிக்க நீதிமன்றம் சென்ற போது தாயின் மடியிலேயே , சிறுவன் உயிர் இழந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தேயே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூர் மண்டலம் பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிகள் மணி மற்றும் அருணாம்மா. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மணிக்கு ஹர்ஷவர்தன் என்ற மகன் இருந்தான் . கடந்த நன்கு வருடங்களுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தில் மீது ஏறி விளையாடி கொண்டு இருக்கும் பொழுது ஹர்ஷவர்தன் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தான் .
சிறிது நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிய ஹர்ஷவர்தன் பழையபடி பள்ளிக்கும் சென்று வந்திருந்தான் . திடீரென்று சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஹர்ஷவர்தனுக்கு மீண்டும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு காது , மூக்கு ,கண்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியது .
இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த அருணாம்மா , தனது உறவினர் , மற்றும் ஊர்காரர்களிடம் இருந்து நான்கு லட்சம் ருபாய் வரை கடன் பெற்று அவருக்கு வேலூர் உற்பட பல தனியார் , மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தார் . இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அவரது கணவர் மணியும் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார் .
கடன் பிரச்னை ஒருபக்கம் , மகனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் அடையாத சோகம் ஒரு பக்கம் என்று கலங்கி நின்ற அருணாம்மா , மனதை கல்லாகி கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி , நீதிமன்றத்தை நாட முடிவு செய்தார் .
இதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை புங்கனூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டை நேரில் சென்று மனு அளிக்கலாம் என்று தனது கிராமத்தில் ஒரு ஆட்டோ மூலம் புங்கனூர் நீதிமன்றத்தை சென்று அடைந்த போது , கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் விடுப்பில் உள்ளதாக தெரிவித்தனர் .
வேறுவழின்றி மீண்டும் ஹர்ஷவர்தனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவெடுத்து ஆட்டோவில் அழைத்து கொண்டு வரும் பொழுது அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு , பேச்சுமூச்சு இல்லாமல் தனது தாயின் மடியிலேயே ஹர்ஷவர்தன் மயங்கி விழுந்தார் .
பதறிப்போய் அவரை உடனடியாக அருகாமையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அருணாம்மா , அங்கு இருந்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக அறிவித்தனர் .
மேல்சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி தனியொரு பெண்ணாக இருந்து தனது மகனை பேணிக்காத்து கடைசியில் கருணைக் கொலை செய்யும் சூழ்நிலையிக்கு தள்ளப்பட்டு அதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்க சென்றபோது தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சம்பவம் , ஆந்திர மாநிலத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .