மேலும் அறிய

Anant Ambani Weight Loss: 18 மாதங்களில் 108 கிலோ எடை குறைத்த அனந்த் அம்பானி; மீண்டும் உடல் பருமனாக இதுதான் காரணம்!

உடல் சார்ந்த பிரச்சினைகளால் அப்போது அதிகபட்சமாக 208 கிலோ வரை அனந்துக்கு உடல் எடை அதிகரித்துள்ளது.

இந்தியப் பணக்காரர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம்தான் இன்றைய இணைய உலகில் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளின் கொண்டாட்டங்கள் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் அண்மையில் நடைபெற்றன. கோலிவுட் தொடங்கி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் வரை இந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற்றனர்.

பாப் ஸ்டார் ரிஹானா இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்று, பாட்டுப் பாடி பாராட்டுகளை அள்ளினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே ஆனந்த் அம்பானி முன்னதாக உடல் இளைத்து காணப்பட்ட புகைப்படங்கள் மீள்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

எடையைக் குறைத்த அனந்த் அம்பானி

திருமண நிகழ்வில் பேசிய அனந்த் அம்பானி, ’’என்னுடைய வாழ்க்கை மலர்ப் படுக்கையால் ஆனது அல்ல. சிறு வயதில் இருந்தே உடல் நலம் சார்ந்து நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்’’ என்று பேசி கண்கலங்கினார். இதுவும் இணையத்தில் வைரலானது. 

நீதா அம்பானி உருக்கம்

இதுதொடர்பாக அவரின் தாய் நீதா அம்பானி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ’’அனந்த் அம்பானி ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்து வருகிறார். இதனால் ஒபிசிட்டி என்னும் உடன் பருமன் பிரச்சினை, அவருக்கு ஏற்பட்டது’’ என்று தெரிவித்து இருந்தார்.

208 கிலோ எடை

உடல் சார்ந்த பிரச்சினைகளால் அப்போது அதிகபட்சமாக 208 கிலோ வரை அனந்துக்கு உடல் எடை அதிகரித்துள்ளது. எனினும் கடுமையான உடல் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் ஆனந்த் 108 கிலோ எடையைக் குறைத்தார். அவரின் ஃபிட்னஸ் பயிற்சியாளர் வினோத் சன்னா, பதினெட்டே மாதங்களில் அதைச் சாத்தியப்படுத்தினார். இவர் பிரபலங்களான ஜான் ஆபிரஹாம், ஷில்பா ஷெட்டி, விவேக் ஓபராய், ஹர்ஷவர்தன் ராணே உள்ளிட்டோருக்கு பயிற்சியளராக இருந்தவர்.

ஆனந்த் அம்பானி Crash diet என்னும் உணவுப் பயிற்சிக்குப் பதிலாக, தனக்கே உரித்தாக வினோத் சன்னாவால் உருவாக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றினார். அவர் ஒவ்வொரு நாளும் 1,200 முதல் 1,500 வரையான கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் அவரின் டயட்டில் அதிகம் இருந்தன.

Anant Ambani Weight Loss: 18 மாதங்களில் 108 கிலோ எடை குறைத்த அனந்த் அம்பானி; மீண்டும் உடல் பருமனாக இதுதான் காரணம்!

கடுமையான உடற்பயிற்சி

அதேபோல ஆனந்த் அம்பானி கடுமையான உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றினார். யோகா, உடல் பலத்துக்கான பயிற்சி, உடலை நெகிழ்வாக்கும் பயிற்சிகள் மற்றும் கார்டியோ உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதேபோல ஆனந்த் அம்பானி தினந்தோறும் 5 முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்தார். தசைகளை மெல்லியதாக உருவாக்குதல், கலோரிகளை எரித்து, ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தினார். ஆனந்த் அம்பானி தினந்தோறும் சுமார் 21 கி.மீ தூரம் நடைபயிற்சி செய்தார். உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் போதிய உறக்கம், அழுத்தத்தைக் கையாளுதல், அலுவலகம் – வாழ்க்கை சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை முறையாகப் பின்பற்றினார். அதனால், அனந்த் அம்பானி இயற்கையாகவே ஒன்றரை ஆண்டுகளில் 108 கிலோ வரை எடையைக் குறைத்தார்.

எனினும் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக அனந்த் அம்பானி எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், அவரின் உடல் எடை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget