Amul Rate: இன்று முதல் விலைகளை உயர்த்தும் அமுல்... முழு விவரம் உள்ளே...
விலை உயர்வுக்குப் பிறகு, அரை லிட்டர் அமுல் கோல்டு பாக்கெட், மற்றும் அதன் ப்ரெஷ் கிரீம் மில்க் ஆகியவற்றின் விலை ரூ 30 ஆக இருக்கும்
இந்தியாவின் முன்னணி பால் விற்பனையாளரான அமுல், அதன் அனைத்து பால் வகையின் விலையையும் ரூ. 2க்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய விலை (மார்ச் 1, 2022) இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான அமுல் விற்பனையிலும் இது பிரதிபலிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வுக்குப் பிறகு, அரை லிட்டர் அமுல் கோல்டு பாக்கெட், மற்றும் அதன் ப்ரெஷ் கிரீம் மில்க் ஆகியவற்றின் விலை ரூ 30 ஆக இருக்கும். அமுல் தாஜா அல்லது டோனுட் மில்க் வகை அரை லிட்டர் ரூ 24க்கும், அமுல் சக்தி ரூபாய் 27க்கும் இனி விற்கப்படும்.
View this post on Instagram
இனி அமுல் பால் பொருட்களின் விலை என்ன இருக்கும்?
தற்போது, அமுல் கோல்ட்டின் ஒரு பாக்கெட் அதன் ரகத்தைப் பொறுத்து லிட்டருக்கு ரூ 58க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், அமுல் தாஜா அல்லது டோனுட் பால் ஒரு லிட்டர் ரூபாய் 48க்கு விற்கப்படுகிறது.
"குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சவுராஷ்டிரா சந்தைகளில், அமுல் கோல்டு பால் அரை லிட்டருக்கு ரூபாய் 30 ஆகவும், அமுல் தாஜா அரை லிட்டருக்கு ரூபாய் 24 ஆகவும், அமுல் சக்தி அரை லிட்டருக்கு ரூபாய் 27 ஆகவும் இருக்கும்" என குஜராத் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. பால் மற்றும் பால் பொருட்களுக்கான அமுல் பிராண்டை சந்தைப்படுத்தும் குஜராத் பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF) அதன் சமீபத்திய அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளது.