இந்தியாவில் 80 சதவிகிதத்தினர் நஞ்சு கலந்த நீரை குடிக்கிறோம்: அரசு அறிக்கையில் திடுக் தகவல்!
ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது, நீங்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீரைக் குடித்தால், சில மில்லி அளவு விஷம் உங்கள் உடலுக்குள் செல்கிறது என்று அர்த்தம்.
காலநிலை மாற்றத்தால் மழை, வெயில் காலங்கள் மாறி வரும் நிலையில், நிலத்தடி நீரின் அளவும் தரமும் குறைந்துகொண்டே வருவதாக அரசு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குடிநீரில் நஞ்சு
இந்திய அரசாங்கம் முன்வைத்துள்ள புள்ளி விபரங்கள் நாட்டின் குடிநீரின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சிவப்புக் கொடியை காட்டுகிறது. புள்ளிவிவரங்கள் இந்தியாவின் குடிநீரின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், நாம் நீண்ட காலமாக நச்சுள்ள தண்ணீரைக் குடித்திருக்கலாம் என்றும் அது கூறுகிறது. நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும், நிலத்தடி நீரில் அதிகப்படியான நச்சு உலோகங்கள் இருப்பதாக இந்த தரவுகள் கூறுகின்றன. மேலும் மே மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது வட இந்தியா பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் என்று கூறியுள்ளது.
எதனால் இப்படி?
ஜல் சக்தி அமைச்சகத்தின் ஆவணத்தின்படி, நாட்டின் 80% க்கும் அதிகமான மக்கள் நிலத்தடியில் இருந்து தண்ணீரைப் பெறுகிறார்கள். எனவே, நிலத்தடி நீரில் உள்ள அபாயகரமான உலோகங்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், தண்ணீர் விஷமாக மாறுகிறது என்று அர்த்தம். நகரங்களை விட கிராமங்களில் இந்த பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமங்களில் வசிப்பதால், இது இன்னும் அபாயகரமானது. இங்கு குடிநீரின் முக்கிய ஆதாரங்கள் கை பம்புகள், கிணறுகள், ஆறுகள் அல்லது குளங்கள். இங்கு நிலத்திலிருந்து நேரடியாக தண்ணீர் வருகிறது. இது தவிர கிராமங்களில் இந்த தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தும் வழக்கம் குறைவு. இதனால், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விஷ நீரைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தண்ணீரில் என்ன கலந்துள்ளது?
- 25 மாநிலங்களில் உள்ள 209 மாவட்டங்களில் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் அளவு லிட்டருக்கு 0.01 மி.கி.க்கும் அதிகமாக உள்ளது.
- 29 மாநிலங்களில் உள்ள 491 மாவட்டங்களில் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் இரும்புச்சத்து லிட்டருக்கு 1 மி.கி.க்கு மேல் உள்ளது.
- 11 மாநிலங்களில் உள்ள 29 மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் உள்ள காட்மியத்தின் அளவு லிட்டருக்கு 0.003 மி.கி.க்கு மேல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- 16 மாநிலங்களில் உள்ள 62 மாவட்டங்களில் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் குரோமியத்தின் அளவு லிட்டருக்கு 0.05 மி.கி.க்கும் அதிகமாக உள்ளது.
- 18 மாநிலங்களில் உள்ள 152 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ஒரு லிட்டருக்கு 0.03 மி.கிக்கு மேல் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவை என்ன பாதிப்புகளை உண்டாக்கும்?
அரசு ஆவணங்களின்படி, ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது, நீங்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீரைக் குடித்தால், சில மில்லி அளவு விஷம் உங்கள் உடலுக்குள் செல்கிறது என்று அர்த்தம். நிலத்தடி நீரில் உள்ள ஆர்சனிக், இரும்பு, ஈயம், காட்மியம், குரோமியம் மற்றும் யுரேனியம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் என்ன ஆகும்?
- அதிகப்படியான ஆர்சனிக் தோல் நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
- அதிகப்படியான இரும்பு அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களைக் ஏற்படுத்தும்.
- தண்ணீரில் அதிக அளவு ஈயம் இருந்தால் நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
- அதிக அளவு காட்மியம் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
- அதிக அளவு குரோமியம் சிறுகுடலில் பரவலான ஹைப்பர் பிளாசியாவை ஏற்படுத்தும், இது கட்டிகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்