மேலும் அறிய

ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.

குறிப்பிட்ட தேதியில் ஜூன் 2026-இல் முடிவடைந்த காலாண்டின் வரியை, வருமான வரித்துறையின் படிவங்களைப் பயன்படுத்தி அப்லோட் செய்ய வேண்டும்.

வருமான வரி செலுத்துபவர்கள், வரி விலக்கு பெறுபவர்கள் இந்த ஜூலை மாதத்தில் மிக முக்கியமான தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஜூலை 1 முதல் ஒரு சில பணிகளை முன்கூட்டியே முடிப்பது தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படும் பிரச்சனையை தடுக்கும். இதனால் வரி செலுத்துபவர்கள் அபராதம் மற்றும் வட்டி விதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். எந்தெந்த முக்கியமான காலக்கெடுக்கள் ஜூலை மாதத்தில் வருகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.


ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.

வருமானவரிச் சட்டம் 2025 பிரிவு 392(1) அல்லது 393(1)-இன் கீழ் ஒரு சிலருக்கு காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கும். எனவே அப்படி அனுமதி பெற்றவர்கள் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையில் பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை ஜூலை 7-ஆம் தேதி அன்று டெபாசிட் செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட தேதியில் ஜூன் 2026-இல் முடிவடைந்த காலாண்டின் வரியை, வருமான வரித்துறையின் படிவங்களைப் பயன்படுத்தி அப்லோட் செய்ய வேண்டும்.

படிவம் 127: வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் ஒருசில பொருட்களை வாங்கும் நபர்களுக்கு டிசிஎஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது போன்ற நபர்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 127-ஐ அப்லோட் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 7.படிவம் 121: ஜூன் 2026 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலாண்டில் பெறப்பட்ட படிவம் 121-ஐ சமர்ப்பிப்பதற்கும் இதுதான் கடைசி தேதி.ஜூலை 15: ஜூன் 2026-ஆம் ஆண்டுக்கான டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் வரியை சலான் இல்லாமல் செலுத்தும் அரசு அலுவலகங்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் படிவம் 137-ஐ வருமானவரித் துறையின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

படிவம் 132 (TDS சான்றிதழ்): வருமானவரிச் சட்டம் 2025, பிரிவு 393-இன் கீழ், 2026-ஆம் ஆண்டின் மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கான டிடிஎஸ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும்.

படிவம் 147: ஒரு சில டீலர்கள் வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டுக்கான அறிக்கையை படிவம் 147-ஐ கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கும் ஜூலை 15 தான் டெட்லைன்.


ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.

படிவம் 148: வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 147(1)(b)-இன் படி, IFSC-இன் கீழ் செயல்படும் நிறுவனங்கள் 2026-ஆம் ஆண்டின், ஜூன் காலாண்டில் வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்திருந்தால், அது குறித்த விவரங்களை படிவம் 148-ஐ கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும்.

படிவம் 1: ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை குறியீடுகளில் மாற்றம் செய்திருக்கும் வாடிக்கையாளர்கள், அது குறித்த விபரங்களை படிவம் ஒன்றைக் கொண்டு வருமானவரித்துறை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வரி செலுத்துவோர் இந்த தேதியை மறக்க வாய்ப்பில்லை. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. வரி செலுத்தும் தனி நபர்கள் ஐடிஆர் படிவம் 1 மற்றும் ஐடிஆர் படிவம் 2 ஆகியவற்றை கொண்டு 2027-ஆம் மதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இதுதான் டெட்லைன்.எனவே வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்த்து அபராதம் இன்றி வரி செலுத்த முன்கூட்டியே முக்கியமான தேதிகளை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget