Airlines: நடுவானில் சலசலப்பு.. போதையில் விமானத்தில் ரகளை.. பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயணி...!
விமானத்தில் பணிப்பெண்ணுக்கு, பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Airlines: விமானத்தில் பணிப்பெண்ணுக்கு, பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக விமானத்தில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணியாளரிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வருகிறது.
பயணி ரகளை
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த சனிக்கிழமை பஞ்சாப் நகரின் அமிர்தசரஸ் நோக்கி விமானம் சென்றுக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார்.
அதன்பின், போதை தலைக்கேறியதால் அங்கிருந்த விமான பணிப்பெண்ணிடம் தண்ணீர் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், விமான பணிப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பாலியல் தொந்தரவு
இதனையடுத்து, விமானப் பணிப்பெண் இந்த சம்பவத்தை விமானக் குழுவினரிடம் தெரிவித்தார். அதன்பின்பு, விமானம் அம்ரித்சரசில் தரையிறங்கிய உடன் விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொண்ட பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர், இதுபற்றி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் கோட்லி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நடுவானில் விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சம்பந்ததப்பட்ட பயணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானி ஒருவர் தனது தோழி டிஜிசிஏ விதிகளை மீறி, அனுமதியில்லாமல் விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் (cockpit) அழைத்து சென்றுள்ளார். காக்பிட்டுக்குள் அழைத்து வந்ததோடு விமானி பணிப்பெண்ணை கடுமையாக பேசியதவாக தெரிகிறது. இதனால் விமான பணிப்பெண் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா விமானம் எந்தவித உடனடி தீர்வும் எடுக்கவில்லை. இதனால் விமான போக்குவரத்து இயக்குநரகம், பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்திற்காக ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தும், விமானியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க