போயிட்டியே தம்பி! விமான விபத்தில் தப்பிய ரமேஷ் கதறி அழுகை.. எமோஷனல் வீடியோ
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். அதில் அவர் தனது சகோதரை காப்பாற்ற முடியவில்லை என உருகி அழுதார்.

ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் தனது சகோதரின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் மல்க கலந்துக்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஸ்வாஸ் குமார்:
கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா கிளம்பிய சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது, இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியான நிலையில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்கிற ஒரே பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ஆனால் அவருடன் அவருடன் பயணித்த அவர் சகோதரர் அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறுதிச்சடங்கு:
இந்த நிலையில் காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். அதில் அவர் தனது சகோதரை காப்பாற்ற முடியவில்லை என உருகி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
#WATCH | Diu | Lone survivor of AI-171 flight crash, Vishwas Ramesh Kumar, mourns the death of his brother Ajay Ramesh, who was travelling on the same flight
— ANI (@ANI) June 18, 2025
Vishwas Ramesh Kumar is a native of Diu and is settled in the UK. pic.twitter.com/fSAsCNwGz5
தப்பித்தது எப்படி?
விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷ் இவருக்கு வயது 40. இந்திய வம்சாவளியான இவர், இந்தியாவுக்கு பயணம் செய்துவிட்டு பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார். அப்போதுதான், இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
சீட் நம்பர் 11Aவில் அமர்ந்திருந்த இவர், விபத்து நடப்பதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு அவசர எக்ஸிட் வழியாக தப்பியதாகக் கூறப்படுகிறது.
தான் தப்பித்தது குறித்து பேசிய அவர் “விமானத்தின் இருக்கை இருந்த பகுதி, பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் தரை தளத்தில் விழுந்து, விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்ல உதவியதாக பகிர்ந்து கொண்டார்.
"விமானத்தின் கதவு உடைந்து இருபதைக் கண்டதும், நான் வெளியே வர முயற்சி செய்யலாம் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். இறுதியில், நான் விமானத்தை விட்டு வெளியே வந்தேன்," என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்த அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















