மேலும் அறிய

Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?

அகமதாபாத் விமானம் விழுந்து சிதறிய மருத்துவ விடுதியில் நூலிழையில் உயிர் தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் என்ன நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உடல் கருகி தீக்கிரையாகிய நிலையில், விமானம் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மொத்தம் 274 பேர் உயிரைப் பறித்த இந்த விமான விபத்தின்போது மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாந்த் யூ டியூப்பில் பேட்டி அளித்தார். அவர் அங்கு என்ன நடந்தது? எப்படி தப்பினார்? என்பது குறித்து விளக்கியுள்ளார். 

கரும்புகையுடன் பரவிய தீ:

அவர் கூறியதாவது, நான் விமானம் வந்து மோதிய கட்டிடத்தின் பக்கத்து கட்டிடத்தில்தான் இருந்தேன். நாங்கள் இருக்கும் கட்டிடத்தில் முதுகலை மருத்துவர்கள் அவர்களின் குடும்பத்துடன் தங்கியிருப்பார்கள். நாங்கள் இருக்கும் இடம் குடும்பங்கள் இருக்கும் இடம். விமானம் வந்து விழுந்த இடம் இளங்கலை மாணவர்கள் இருந்த கேன்டீன். சரியாக அது சாப்பாட்டு நேரம்.

அதனால், மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 1.40 அந்த மாதிரி இடி சத்தம் மாதிரி கேட்டது. 5 நொடி கூட இல்லை. கட்டிடத்தை சுற்றி புகை சூழ்ந்துவிட்டது. நெருப்பும் பரவ ஆரம்பித்து விட்டது. அறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்ப்பதற்குள் கரும்புகை மட்டும்தான் இருந்தது. 

கீழே குதித்து தப்பினேன்:

என்ன செய்வதென்றே தெரியவில்லை. 5வது மாடியில் இருந்து கீழே ஓடி வர ஆரம்பித்தேன். ஓடி வர ஓடி வர நெருப்பும் பரவத் தொடங்கியது.  கீழே இருந்த கார், பைக் எல்லாம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. கீழே தரைக்கு வர முடியவில்லை. வெளியில் இருந்து மக்கள் வெளியில் வருமாறு கூச்சலிட்டனர். இதனால், முதல் மாடியில் இருந்து கீழே குதிச்சு தப்பினேன். வெளியில் இருந்து 5 நிமிஷம் கழிச்சுதான் விமானம் விழுந்ததே தெரிஞ்சது. 

எப்படி உள்ளே போயி காப்பாத்துறதுனு கூட யோசிக்க முடியல. அதுக்கு அப்புறம்தான் தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் காப்பாத்த வந்தார்கள். விமானத்தோட லைட், இறகுகள் எல்லாம் சிதறி சுத்தி இருந்த 100, 200 மீட்டர் கட்டிடத்துல எல்லாம் விழுந்துருச்சு. அப்படிதான் நாங்க இருந்த பில்டிங்ல பட்டு தீப்பிடிச்சது. 

சிறு குழந்தைகள் இறப்பா?

விமானம் வெடிக்கவும் சுத்தி இருந்த மரங்கள், ஜன்னல்கள், துணிகள் எல்லாம் தீப்பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அதுனால யோசிக்க கூட முடியவில்லை. சாப்பிட்ட கையோட குதிச்சு தப்பிச்சுட்டேன். இறந்து போன எம்பிபிஎஸ் மாணவர்கள் 19, 20 வயசுதான் இருப்பார்கள். நிறைய பசங்க ஐசியு-வில் இருக்காங்க.  நாங்க இருந்தா குடியிருப்புலயும் சின்னக்குழந்தைங்க, வயசானவங்க இறந்ததா தகவல் சொல்றாங்க. ஏதும் உறுதியா தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கோர விபத்து நடப்பாண்டின் மிகப்பெரிய துக்க நிகழ்வாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் உடல்களை ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget