என்னது 1300 கிரிக்கெட் ஸ்டேடியமா... அதானி குழுமத்தின் மாஸ் திட்டம்!
அதானி குழுமத்தின் சுற்றுச்சூழல் திட்டம் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் பிரபல தொழில்நிறுவன குழுமங்களில் ஒன்று அதானி குழுமம். இந்த குழுமம் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் பருவநிலை மாற்றத்திற்காக ஒரு சுற்றுச்சூழல் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதாவது 2021ஆம் ஆண்டிற்குள் 1300 மெகா வாட் அளவிற்கு மாசுப்படுத்தாத எரிசக்தி பயன்பாட்டை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. அத்துடன் பல்வேறு இடங்களில் மரம் நடுவது உள்ளிட்ட சில சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்தின் சமூகவலைதள பக்கத்தில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் சுமார் 1300 கிரிக்கெட் ஸ்டேடியம் அளவிற்கு இந்த குழுமம் ஒரு சுற்றுச்சூழல் முன்னெடுப்பை எடுத்துள்ளதாக கூறியது. அதாவது சுமார் 3000 ஹெக்டேர் அளவிற்கு சதுப்புநில மரங்களை நட்டுள்ளதாக கூறியுள்ளது. அந்த அளவு சுமார் 1300 கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு தேவையான அளவு இடம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஆதானி குழுமம் 4.4 மில்லியன் மரங்களையும் நட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 2340 ஹெக்டருக்கு மேல் உள்ள சதுப்புநிலங்களை பாதுகாக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே அதானி குழுமம் உலகளவில் ஒரு மிகப்பெரிய சூர்ய எரிசக்தி திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது. இராமநாதபுர மாவட்டத்தின் கமுதி அருகே 2500 ஏக்கர் பரப்பளவில் சுமார் 950 ஒலிம்பிக் கால்பந்து மைதானங்களின் இடத்தை போல் ஒரு எரிசக்தி மையத்தை நடத்தி வருகிறது.
கமுதியில் இருக்கும் இந்த எரிசக்தி மையத்திலிருந்து 648 மெகாவாட் சூர்ய எரிசக்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை அதானி குழுமம் செயல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கியச் செய்திகள் சில...
Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்!#VedhaIllam #jeyalalithahttps://t.co/K5vqtMLMbW
— ABP Nadu (@abpnadu) November 24, 2021
Watch Video: பீர் குடிக்க முயற்சித்த பாம்பு... அதன் பின் நடந்த விபரீதம்... ஷாக் வீடியோ!#beer #snakehttps://t.co/Asi87EThJN
— ABP Nadu (@abpnadu) November 24, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: விவசாய சட்டங்களை திரும்பபெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்