மேலும் அறிய

Accident: குஜராத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு...

Accident: குஜராத் மாநிலத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Accident: குஜராத் மாநிலத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம்  வதோதரா நகரின் புறநகரில் அகமதாபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சாலையில் எதிரே ஒரு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 4 மணியளவில் சொகுசு பேருந்து  மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சொகுசு பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து சூரத் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும்  4 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று சமீபத்தில் கேரளாவில் ஒரு கோர விபத்து ஒன்று நடைபெற்றது. கேரளாவின் வடக்கஞ்சேரி பகுதியில் அரசுப் பேருந்தும்- சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்பட 42 பள்ளிக் குழந்தைகள் மற்றும் 5 ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஊட்டிக்கு சென்றது. அப்போது வடக்கஞ்சேரியிலிருந்து வாலையாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அந்த தனியார் பேருந்து அரசு பேருந்து உடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 9 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் விபத்து குறித்து சில தகவல்கள் கூறப்பட்டது. இந்த விபத்துக்கு சுற்றுலா பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் அலட்சியப் போக்கே காரணம் என்பதுபோல இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி மிகவும் வைரலானது. அதில் பேருந்தை இயக்கி வந்த டிரைவர், பேருந்து வேகமாக சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இருக்கையை விட்டு எழுந்து நடனமாடுகிறார் என்பது வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணைக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக தென் இந்தியாவைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலங்களில் முதல் இடத்தில்  உள்ளது. அதனை அடுத்த இடத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேராளா அந்த வரிசையில் உள்ளன. சாலைகளில் பயணிக்கும் போது சாலை விதிகளை முறையாக பின் பற்றினாலே விபத்துகள் ஏற்படாது என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்,   சாலைகளின் தரம் என்பது மிகவும் மோசமாக இருப்பதை யாரும் பேசுவதோ, அரசிடம் முன் வைப்பதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Embed widget