AC GST Cut: மக்களுக்கு குளு குளு நியூஸ்! 8000 வரை குறைந்த ஏசி விலை! உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடல் இதோ!
ஏ.சிகளில் ரூ.4,500 முதல் ரூ.8,000 வரை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை சீசனில் விலை குறைப்பு வந்துள்ளதால், விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மக்களுக்கு பெரிய நிம்மதியை தந்துள்ளது, இன்று முதல் அமலாகி உள்ள இந்த வரிக்குறைப்பால் சிறிய வீட்டு பொருட்கள் முதல் கார் வரை விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் ஏசி ஆகிய பொருள்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை காண்போம்
குறைந்த ஏசி விலை:
ஜி.எஸ்.டி. கவுன்சில் சமீபத்தில் 28% இருந்து 18% ஆக வரியை குறைத்ததைத் தொடர்ந்து, முன்னணி பிராண்டுகள் விலையைக் குறைத்து நுகர்வோருக்கு பலனளித்துள்ளன.
ஏ.சிகளில் ரூ.4,500 முதல் ரூ.8,000 வரை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகை சீசன் தொடங்கும் இந்த நேரத்தில் விலை குறைப்பு வந்துள்ளதால், விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னணி நிறுவனங்கள் விலை பட்டியலை மாற்றியுள்ளன:
கோட்ரேஜ் அப்பிளையன்சஸ்
கோட்ரேஜ் நிறுவனம், காஸெட்டுகள் மற்றும் டவர் ஏ.சிக்களுக்கு ரூ.8,550 முதல் ரூ.12,450 வரை எம்.ஆர்.பி விலையை குறைத்துள்ளது. ஸ்ப்லிட் இன்வெர்டர் ஏ.சிக்களில் ரூ.3,200 முதல் ரூ.5,900 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஹையர் (Haier)
ஹையர் நிறுவனத்தின் கிராவிட்டி (1.6 டன் இன்வெர்டர்) மாடல் ஏ.சி ரூ.3,905 குறைக்கப்பட்டு ரூ.46,085 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கினோச்சி AI (1.5 டன் 4-ஸ்டார்) மாடல் ஏ.சி விலை ரூ.3,202 குறைந்து ரூ.37,788 ஆகும்.
வோல்டாஸ் (Voltas)
முன்னணி RAC தயாரிப்பாளரான வோல்டாஸ் தனது விண்டோ ஃபிக்ஸ்டு ஸ்பீடு ஏ.சி விலையை ரூ.42,990 இலிருந்து ரூ.39,590 ஆகக் குறைத்துள்ளது. அதன் இன்வெர்டர் விண்டோ ஏ.சி விலையும் ரூ.46,990 இலிருந்து ரூ.43,290 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
டைகின் (Daikin)
டைகின் நிறுவனத்தின் 1 டன் 5-ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏ.சி விலை ரூ.20,500 இலிருந்து ரூ.18,890 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
-
1.5 டன் 5-ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏ.சி விலை ரூ.73,800 இலிருந்து ரூ.68,020 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
-
1.8 டன் 5-ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏ.சி விலை ரூ.92,200 இலிருந்து ரூ.84,980 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
-
1 டன் 3-ஸ்டார் ஹாட் & கோல்ட் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏ.சி விலை ரூ.50,700 இலிருந்து ரூ.46,730 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
-
1.5 டன் 3-ஸ்டார் ஹாட் & கோல்ட் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏ.சி விலை ரூ.61,300 இலிருந்து ரூ.56,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் (LG Electronics)
எல்ஜி தனது 1 டன் 3-ஸ்டார் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏ.சி விலையை ரூ.2,800 குறைத்து ரூ.32,890 ஆக நிர்ணயித்துள்ளது. 1.5 டன் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏ.சி விலையை ரூ.3,600 குறைத்து ரூ.42,390 ஆகவும், 2 டன் ஸ்ப்லிட் ஏ.சி விலையை ரூ.4,400 குறைத்து ரூ.55,490 ஆகவும் நிர்ணயித்துள்ளது.
பனாசோனிக் (Panasonic India)
பனாசோனிக் தனது 1.5 டன் விண்டோ ஏ.சிக்களின் ஆரம்ப விலையை ரூ.45,650 இலிருந்து ரூ.42,000 ஆகக் குறைத்துள்ளது. அதிகபட்சம் ரூ.49,990 ஆக இருந்த விலை ரூ.46,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபிக்ஸ்டு ஸ்பீடு ஸ்ப்லிட் ஏ.சி விலையும் (1 டன் முதல் 2 டன் வரை) ரூ.46,100 – 69,400 இலிருந்து ரூ.42,400 – 63,900 வரை குறைக்கப்பட்டுள்ளது.






















