C-Voter Snap Poll: உத்தரகாண்டில் மீண்டும் பாஜக.. பஞ்சாபில் ஆம் ஆத்மி.. ஏபிபி - சிவோட்டர் சர்வே கருத்துக் கணிப்பு!
யோகி ஆதித்தியநாத் ஆட்சிக்கு எதிரான அலையை இதர எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தவறவிட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
2022 மே மாதத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர காணட் , மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 2017இல் நடந்த முந்தைய தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. யோகி ஆதித்தியநாத் தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. இந்த சட்டமன்றம் 2022 மே மாதம் முடிவடைகிறது.
இந்நிலையில், தேர்தல் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் ஏபிபி நிறுவனமும்- சி வோட்டரும் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் தேர்தல் குறித்து மக்களின் மனநிலை பற்றி தொடர் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த கருத்துக் கணிப்பின் நான்காவது முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
பஞ்சாப் நிலவரம்: 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிஜேபி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இருந்தே வெளியேற்றப்படும் என்றும் தெரிய வருகிறது.
பஞ்சாபில் 18,000 பேரிடம் நடத்தப்பட்டக் கருத்துக் கணிப்பின் படி, 34.1 % வாக்குகளை காங்கிரஸ் பெறும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 38.4 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிரோமணி அகாலி தளம் அதிகபட்சமாக 20.4 % வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உத்தர காண்ட் கள நிலவரம்: 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவையில், பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மிகவும் பிரபலமான முதல்வர் வேட்பாளர் என்று அதிகப்படியானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சியின் பெயர் | வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்கு % |
---|---|---|
பாஜக | 33-39 | 40% |
காங்கிரஸ் | 29-35 | 36% |
தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்கிறது. ஆட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்களிடம் காணப்படுகிறது. உத்தரகாண்ட் அரசியலில் ஆம் ஆத்மி கட்சி தற்போது தீவிரமாக கால் பதித்து வருகிறது. எனவே,ஆளும் பாஜக கட்சிக்கு எதிரான வாக்குகளை கணிசமான பெறக்கூடும் என்பதாலும், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெறாது என்பதாலும், தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோவா:
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.
எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர்:
முன்னதாக, உத்திரி பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை தொடங்கி வைத்தி பேசிய பிரதமர் மோடி, ’ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு தேசபக்தருக்கும் பேரிழப்பு. உத்தரப்பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த புதல்வர் குரூப் கேப்டன் வருண் சிங்கின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.’’அவரது உயிரைக்காப்பாற்றுமாறு அன்னை பாதேஸ்வரியை நான் பிரார்த்திக்கிறேன். வருண் சிங் அவர்களின் குடும்பத்தினருடன் நாடு இன்று உள்ளது. நாம் இழந்த வீரர்களுடைய குடும்பத்தினருடனும் நாடு உள்ளது’’ என்று கூறினார்
Speaking at the launch of the Saryu Nahar National Project. Watch. https://t.co/d0tNpdM8kk
— Narendra Modi (@narendramodi) December 11, 2021
எதிர்க்கட்சிகளை தாக்கி பேசிய அவர், "முன்பு மாபியா பாதுகாக்கப்பட்டதாகவும் , இன்று அது துடைத்தெறியப் பட்டிருக்கிறது. முன்பு வலுத்தவர்கள் வளர்ச்சியடைந்தனர். இன்று, யோகி அரசில், ஏழைகள், அடிமட்டத்தில் உள்ளவர்கள், பிற்படுத்தப்படோர், பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான் உ.பி மக்கள்,வேறுபாடு கண்கூடாகத் தெரிகிறது என்கின்றனர். முன்பு, மாபியாக்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர், இன்று அந்த ஆக்கிரமிப்புகளை யோகி அவர்கள் புல்டோசர் கொண்டு அகற்றியுள்ளார். அதனால்தான் வேறுபாடு கண்கூடாகத் தெரிகிறது என்று உ.பி மக்கள் கூறுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பெண்களை மையப்படுத்தும் காங்கிரஸ்: உ.பி காங்கிரஸ் பெண்களுக்கான தேர்தல் அறிக்கை "சக்தி விதானை" வெளியிட்டுள்ளது. "சக்தி விதான்" என்பது குடும்ப பெண்கள், கல்லூரிப் பெண்கள்,அங்கன்வாடி ஆஷா சகோதரிகள், சுய உதவி குழுப் பெண்கள்ஆசிரியைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரின் கருத்துகளையும் ஒருமித்து உருவாக்கியதாகும்.
சக்தி விதான் பெண்கள் முன்னேற்றத்திற்கும், அரசியலில் பெரும் பங்கு வகிப்பதற்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.