இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. நாளை, ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
ABP Networkஇன் தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024இல் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் முதன்மையான பன்மொழி செய்தி தளமாக விளங்கும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024'க்கு அனைத்தும் தயாராகியுள்ளது. நாளை மறுநாள் (அக்டோபர் 25), ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தி சதர்ன் ரைசிங் மாநாட்டில், தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தையும், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார புதுமைகளை இயக்குவதில் அதன் செல்வாக்குமிக்க பங்கையும் கொண்டாட அரசியலின், கலாச்சாரத்தின் மற்றும் தொழில்துறையில் இருந்து முன்னணி குரல்கள் ஒன்று கூடுகின்றன. இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தென்னிந்தியா முக்கிய பங்காற்றும் நிலையில், தேசிய அளவில் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
"தென்னிந்தியாவின் வளர்ச்சியில் முதிர்ச்சி: அடையாளம், உத்வேகம் மற்றும் தாக்கம்" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சுகாதாரம், கல்வி, கலாச்சார பாதுகாப்பு மற்றும் பிராந்திய அடையாளத்தின் பரிணாம வளர்ச்சி போன்ற முக்கியமான பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்கள் இந்த மாநாட்டில் நடக்கப்போகிறது.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டவர்கள் இந்த மாநாட்டில் பேச உள்ளனர். முன்னாள் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் பத்ம பூஷன் புல்லேலா கோபிசந்த், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொடுவால், நடிகை கவுதமி, நடிகர் சாய் துர்கா தேஜ், நடிகை ராஷி கண்ணா போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் தென்னிந்தியாவின் துடிப்பான அடையாளம் குறித்த தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஹைதராபாத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மாதவி லதா, காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநகரி ஆகியோர் பெண்கள் மட்டுமே உரையாடும் கலந்துரையாடலில் கூட்டாட்சியை வலுப்படுத்துவது என்ற தலைப்பில் பேச உள்ளனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் மது கவுட் யாஷ்கி, பாரம்பரிய பாடகர் பிந்து சுப்பிரமணியம், விருது பெற்ற பாடகி ஷில்பா ராவ், பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் மூன்று முறை தேசிய விருது பெற்ற யாமினி ரெட்டி ஆகியோர் தென்னிந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி பேச உள்ளனர்.
தென்னிந்திய பிராந்தியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை குறித்து எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான டாக்டர் விக்ரம் சம்பத் பேச உள்ளார். Rapido நிறுவனத்தின் அபார வளர்ச்சி குறித்து அதன் இணை நிறுவனரான அரவிந்த் சங்கா உரையாட உள்ளார்.
தென்னிந்தியா தொடர்ந்து பல துறைகளில் சிறந்து விளங்குவதற்கான அளவுகோல்களை அமைத்து வருவதால், ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’, ஒரு நாள் முழுவதும் அறிவூட்டும் உரையாடல்களையும், வாய்ப்புகளையும் அளிக்கும், இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றும் இந்த பிராந்தியத்தின் சாதனை கொண்டாட்ட நிகழ்வாக அமைய உள்ளது.
நாளை மறுநாள், காலை 10.00 மணி முதல் ஏபிபி நாடு உள்பட ஏபிபி நெட்வொர்க்கின் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் இந்த நிகழ்வை நேரலையில் கண்டு களிக்கலாம்.
ஏபிபி நெட்வொர்க் பற்றி:
புதுமையான ஊடகமும் உள்ளடக்கத்தை உருவாக்கும் நிறுவனமான ஏபிபி நெட்வொர்க், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் துறையில் நம்பகமான குரலாக உள்ளது. பல மொழி செய்தி சேனலாக உள்ள ஏபிபி, இந்தியாவில் 535 மில்லியன் நபர்களுக்கு தகவல்களை சென்று சேர்க்கிறது. ஏபிபி கிரியேஷன்ஸின் கீழ் உள்ள ஏபிபி ஸ்டுடியோஸ், செய்திகளுக்கு அப்பாற்பட்ட அசலான, புதுமையான உள்ளடக்கத்தை உருவாக்கி, தயாரித்து வழங்குகிறது. ஏபிபி குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ள ஏபிபி நெட்வொர்க் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக முன்னணி ஊடக நிறுவனமாக உள்ளது. தெற்கில் வலுவான இருப்பைக் கொண்ட ஏபிபி நெட்வொர்க் இரண்டு முக்கிய டிஜிட்டல் செய்தி சேனல்களைக் கொண்டுள்ளது. ஏபிபி நாடு மற்றும் ஏபிபி தேசம், தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. தமிழ் மொழி, அதன் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஏபிபி நாடு, அதனுடைய உள்ளடக்கத்தின் வழியாக தமிழ்நாட்டிலுள்ள பார்வையாளர்களுக்கு வலு சேர்க்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உள்ள தெலுங்கு பேசும் பார்வையாளர்களுக்கு ஏபிபி தேசம் நம்பகமான செய்திகளை வழங்கி, அவர்களின் கலாச்சாரத்தையும் மற்றும் உணர்வையும் கொண்டாடுகிறது.