மேலும் அறிய

LPG வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி! 7 நாட்களில் விளக்கம் தரவில்லை என்றால் மானியம் நிறுத்தம்!

”உங்களுடைய ஆண்டு வருமானம் மானியம் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருக்கிறது என்பதால் உங்களுக்கு இனி சிலிண்டர் மானியம் ரத்தாகும்”

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எடுத்து பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கிறது.

LPG வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி! 7 நாட்களில் விளக்கம் தரவில்லை என்றால் மானியம் நிறுத்தம்!

முதலில் அனைத்து நிறுவனங்களிடம் அரசு இந்த மானிய தொகையை நேரடியாக வழங்கியது. எனவே 300, 400 ரூபாய் கொடுத்தாலே போதும் சிலிண்டர் கிடைத்துவிடும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வந்த பிறகு சரியாக் மக்களுக்கு மானியம் சென்று சேர்வதை உறுதி செய்யக்கூடிய நோக்கத்தில் வாடிக்கையாளர் வங்கி கணக்கிலேயே மானியத் தொகையை வரவு வைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சிலிண்டர் முன்பதிவு செய்து பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் அவர்கள் சிலிண்டர் எடுத்தவுடன் அந்த மானிய தொகை என்பது வரவு வைக்கப்படும்.

இந்நிலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இண்டேன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு எச்சரிக்கை தகவலை அனுப்ப தொடங்கி இருக்கின்றன. அதாவது ”உங்களுடைய ஆண்டு வருமானம் மானியம் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருக்கிறது என்பதால் உங்களுக்கு இனி சிலிண்டர் மானியம் ரத்தாகும்” என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி போன்ற நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு "Dear LPG Consumer, as per available income tax records, your (or a linked family member's) gross taxable income exceeds the prescribed limit of ₹10 lakh. If you wish to dispute this, please contact the toll-free number 1800-2333-555 or register your grievance on the portal of your respective oil marketing company within seven days of receipt of this message. If no response is received within the stipulated period, the LPG subsidy may be discontinued thereafter" என மெசேஜில் அலர்ட்டுகளை அனுப்பி இருக்கின்றன.

அதாவது "எல்பிஜி வாடிக்கையாளர்களே வருமான வரி ஆவண பதிவுகளை ஆய்வு செய்வதில் உங்களுடைய வரிக்கு உட்பட்ட வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. உடனடியாக 1800-2333-555 என்ற நம்பரை தொடர்பு கொண்டு நீங்கள் உங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும். இந்த மெசேஜ் உங்களுக்கு வந்த ஏழு நாட்களுக்குள் அதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு கிடைக்கக்கூடிய மானியம் நிறுத்தப்படும்" என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

LPG வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி! 7 நாட்களில் விளக்கம் தரவில்லை என்றால் மானியம் நிறுத்தம்!

இந்தியாவில் தற்போது சந்தை விலைக்கு நேரடியாக சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் தகுதி உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மானிய தொகை நேரடியாக வரவைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த மானியம் கிடைக்காது. இந்த நிலையில் வருமான வரி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது சரியான வாடிக்கையாளர்களுக்கு இந்த மானிய தொகை சென்று சேர்வதை உறுதி செய்ய மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் பல்வேறு வாடிக்கையாளர்களும் இவர்கள் போடக்கூடிய மானியமே வெறும் 24 ரூபாய் தான் பல ஆண்டுகளாக இந்த தொகை அப்படியே இருக்கிறது. ஒரு சிலிண்டரையே 1000 ரூபாய் கொடுத்து எடுக்கிறோம், ஆனால் அதில் அரசு தரக்கூடிய மானியம் வெறும் 24 ரூபாய் தான், இப்படி ஒரு மானியத்தை அவர்கள் எதற்கு தர வேண்டும், இல்லை அதை நிறுத்தினால் தான் என்ன ஆகிவிடப்போகிறது என விமர்சனம் செய்திருக்கின்றனர். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் சாமானிய மக்களின் வருமான வரி ஆவணங்களை எப்படி அணுக முடியும் இது தனி உரிமையை மீறும் செயல் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget