வீழ்வேன் என நினைத்தாயோ.. இது Again Drinks வைத்தீஸ்வரனின் கதை!
வீழ்வேன் என நினைத்தாயோ என்ற பாரதியின் பாடல் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல அது ஓர் உணர்வு. அந்த உணர்வை உள்வாங்கிக் கொண்டால் அதுவே உயிர் மூச்சாகும். அதுதான் தொழிலதிபர் கே.வைத்தீஸ்வரனின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
வீழ்வேன் என நினைத்தாயோ என்ற பாரதியின் பாடல் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல அது ஓர் உணர்வு. அந்த உணர்வை உள்வாங்கிக் கொண்டால் அதுவே உயிர் மூச்சாகும். அதுதான் தொழிலதிபர் கே.வைத்தீஸ்வரனின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
வைத்தீஸ்வரனின் கதை புத்தாக்கம், தொழில் முனைதல் பற்றியது மட்டுமல்ல. இது துணிவின் கதை. ஒரு தொழில் முனையும் நபர் எப்படி தனது தொழிலில் ஆழ்ந்து கிடக்கக்கூடும் என்பது பற்றியது.
ஃபேப்மால் என்ற இ காமர்ஸ் நிறுவனம் நினைவிருக்கிறதா! ஃபேப்மாலின் சக நிறுவனர்களில் ஒருவர் கே.வைத்தீஸ்வரன். 6 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்தீஸ்வரனின் மற்றொரு இ காமர்ஸ் நிறுவனமான இந்தியாபிளாசா IndiaPlaza திவாலானபோது வாழ்வை முடித்துக் கொள்ளவே விரும்பினார். மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்ட்டார். தற்கொலை எண்ணங்களை எப்படிக் கடந்தார் என்பதைத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அத்தனை இடர்களையும் கடந்து வந்தார் வைத்தீஸ்வரன். ஆம் மீண்டும் ஒரு புதிய தொழிலில் களமிறங்கினார். குறைந்த கொழுப்பு பால், யோகர்ட், செயற்கை சர்க்கரை, பிரசர்வேட்டிவ்ஸ் இல்லாத எனர்ஜி ட்ரிங் என்று களமிறங்கினார். குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலேயே 90 நாட்கள் கெடாமல் இருக்கும் பதார்த்தம் என்பது தான் இவரது தயாரிப்பின் ஹைலைட்.. இந்த உலகிலேயே எந்த ஒரு பானமும் இந்தத் தனிச்சிறப்பைக் கொண்டதில்லை என வைத்தீஸ்வரன் கூறுகிறார். இதற்கான இந்திய பேடன்ட் அலுவலகம் இவரது தயாரிப்புகளை அங்கீகரித்து பிரத்யேக பேடன்ட் ரைட்ஸ் கொடுத்துள்ளது.
இந்திய தட்பவெப்பத்தைப் பொறுத்தவரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காத பானங்கள் நீண்ட நல்ல பருகும் தன்மையுடன் இருப்பதில்லை. இதை உடைக்க வைத்தீஸ்வரன் தனது மனைவி மற்றும் நண்பருடன் இணைந்து சமையலறை ஆராய்ச்சியைத் தொடங்கினார். பல்வேறு காய்கறிகள், பழங்கள் கலவையுடன் பால், யோகர்ட் காம்பினேஷனை உருவாக்கிப் பார்த்தார். ஒருவழியாக ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே 90 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் பானங்களை தயாரித்தார். 2019ல் அவருடைய பிராண்ட் மீண்டும் சந்தைக்கு வந்தது. புதுப்புது ஃப்ளேவர்களுடன் வந்தனர். ஒரு பொருளை உருவாக்குவது சவால் என்றால் அதற்கான பேடன்ட்டைப் பெறுவது என்பது ஆசிர்வாதம் என்று வைத்தீஸ்வரன் கூறுகிறார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எங்களின் தயாரிப்புக்கு பேடன்ட் கிடைத்திருக்கிறது. இது கண்டுபிடிப்புகளில் ஒரு புதிய மைல்கல். உலகில் முதன்முறை என்று வைத்தீஸ்வரன் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியா பிளாஸா வைத்தீஸ்வார் ஸ்டார்ட் அப்பில் இருந்து விலகி தான் இருந்தார். அவரிடம் அப்போதும் பலர் இ காமர்ஸ் ஐடியாக்களைக் கூறினர். இங்கே இந்தியாவில் மட்டும் தான் ஒரு தொழில் முனையும் நபர் தோற்றால் மொத்த பொறுப்பும் அவர் தோள்களுக்கு வந்துவிடுகிறது.
ஒரு நாள் எனது நண்பர் தனது மகனின் வெளிநாட்டு டென்னிஸ் கோச் இந்தியாவில் நல்ல ஊட்டசத்துப் பானமே இல்லை என அங்கலாய்த்துக் கொண்டதாகக் கூறினார். இந்தியச் சந்தைகளில் இருப்பவை ஒன்று சர்க்கரை நிரம்பியதாக அல்லது நர்ச்சத்தே இல்லாததாக இருக்கின்றன என்று புகார் கூறியதாக நண்பர் கூறினார். அது தான் எனக்கு ஸ்பார்க். அந்த வெற்றிடத்தை நிரப்ப யோசித்தேன். பாதாம், முந்திரி, பேரீச்சை, ஏலம், தேன், ஸ்ட்ராபெரி, சக்கலேட், வெல்லம், கேரட், ஆரஞ்சு, வாழைப்பழம், மாம்பழம், பால், யோகர்ட் என எனது கைவண்ணங்கள் நீண்டன.
நிறைய டெய்ரி நிறுவனங்கள் பதப்படுத்தப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை இல்லாத பானம் சாத்தியமில்லை என்றனர். அப்போது தான் திங்கிங் ஃபோர்க்ஸ் நிறுவனத்தின் ரிங்கா பானர்ஜி என்னுடன் இணைந்தார். ஃபேப்மாலின் முன்னாள் முதலீட்டாளர்கள் ஏஞ்சல் இன்வஸ்டர்களாக இணைந்தனர். இப்போது எல்லாம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு இனிப்பு, அதிக இனிப்பு, தித்திக்கும் இனிப்பு இவ்வளவு தான் சுவை பற்றி தெரியும். இதில் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது மாபெரும் வெற்றி. எங்களின் டார்கெட் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான்.
ஒருவேளை இந்தியா பிளாசாவுக்கு நிகழ்ந்தது இதற்கும் நிகழ்ந்தால் நான் சிஇஓக்கள் போல் மனம் கொண்டு அல்லாமல் புத்தியைக் கொண்டு யோசிப்பேன் என்று கூறினார்.